ஒரு வேளை சாப்பிட போனவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பொருள்!

0

ஒருவேளை உணவால் ஒரே நாளில் முதியவர் ஒருவர் அமெரிக்காவில் பணக்காரர் ஆகியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கில் வசித்து வரும் ரிக் அந்தோஷ் என்ற முதியவருக்கே இந்த அதிர்ஷ்ட பொருள் கிடைத்துள்ளது.

நாள்தோறும் அங்கிருக்கும் உணவு விடுதியில் இரவு உணவு சாப்பிட செல்வதை வழக்கமாகக் கொண்டவர். இதேவேளை வழக்கம்போல் 1000 ரூபாய் மதிப்புள்ள கடல் சிப்பியில் செய்யப்படும் உணவை அவர் ஆர்டர் செய்துள்ளார்.

அதனை சாப்பிடும் பொழுது வாயில் உருண்டை வடிவில் ஏதோ சிக்கியுள்ளது. அதனை வெளியே எடுத்து பார்க்கும்பொழுது அது வெண்ணிற முத்து என அவருக்கு தெரிய வந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

1000 ரூபாய் மதிப்புள்ள உணவு சாப்பிட்ட எனக்கு 3 லட்சம் மதிப்புள்ள இந்த புதையல் கிடைத்துள்ளது. முதலில் என் வாயில் சிக்கியபொழுது எனது பல்தான் உடைந்துவிட்டதாக எண்ணினேன்.

பின்னே, வெளியே எடுத்துப் பார்த்த போது தான் அது ஒரு முத்து என தெரியவந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 28 ஆண்டுகாலமாக இந்த உணவகத்தில் தான் நான் சாப்பிடுகிறேன், இனியும் தொடர்ந்து இங்கு வருவேன் என்று அந்த முதியவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article10 வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம்!
Next articleகைகள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த இளம்பெண்! மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட காதல்!