இந்த விதையை ஒரு கையளவு சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்?

0
4396

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால் போதும் உடல் எடை குறைந்து விடும்.

பெரும்பாலும் முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல் முலாம் பழ விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் முலாம் பழத்தைப் போலவே, அதன் விதைகளிலும் ஏராளமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உங்களுக்கு முலாம் பழத்தின் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில் முதலில் முலாம் பழத்தில் இருந்து விதைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை நீரில் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை வெயிலில் போட்டு நன்கு உலர்த்த வேண்டும்.

முலாம் பழ விதைகள் நன்கு வெயிலில் உலர்த்த பின், அதை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். குறிப்பாக இந்த விதைகள் ஸ்நாக்ஸாக பகல் நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

முலாம் பழ விதைகளில் நார்ச்சத்து நாம் நினைத்திராத அளவில் அடங்கியுள்ளது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால், அது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

எனவே நீங்கள் டயட்டில் இருந்தால், அதில் முலாம் பழ விதைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தை விரைவில் அடைய உதவிப் புரியும்.

குறிப்பு

முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறியும் பழக்கம் இருந்தால், இனிமேல் தூக்கிப் போடாதீர்கள். அதன் விதைகளையும் சாப்பிடுங்கள்.

அதுவும் இந்த விதைகளை உங்களது அன்றாட சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாண்விட்ச் மீது தூவி சாப்பிடுங்கள். இவ்வளவு நன்மைகளை வாரி வழங்கும் முலாம் பழ விதைகளை இனிமேல் உங்களுக்கு பிடித்தவாறு சாப்பிடுங்கள்.

Previous articleஏன் ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் தெரியுமா!
Next articleபெண்களை ஆபாச வீடியோ எடுக்கும் கும்பல்! விழிப்புணர்வு பதிவு! அவசியம் பகிருங்கள்!