இவற்றால் கூட உங்களின் விந்தணு உற்பத்தி குறைகிறது!

0

இவற்றால் கூட உங்களின் விந்தணு உற்பத்தி குறைகிறது!
குழந்தைகள் என்றால் அனைவருமே மகிழ்ச்சியடைவார்கள். அதிலும் நீங்கள் ஒரு குழந்தைகளுக்கு தாயாக போகிறீர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை அவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

#vinthu #vinthtanu #utpaththu #aanmai #kuraivu

இதற்கு முதலில் பெண் தனது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று ஒரு ஆணும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

ஒருவர் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனைகளை தேடி அலைகிறீர்கள் அல்லது கோயில் கோயிலாக போய் பல வேண்டுதல்களை செய்வார்கள்.

இத அனைத்தும் தேவையே இல்லை, நீங்கள் தினமும் செய்யும் வேலையை தவறாமல் செய்தாலே போதும். உங்களது கணவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

தாய் குலமே நீங்கள் கர்ப்பமடைய விரும்பினால் முதலில் உங்கள் கணவரின் ஆரோக்கியத்தை கடைபிடியுங்கள்.

சில டிப்ஸ் இதோ உங்களுக்காக:

சுய இன்பம்:

ஆண்களது விந்தணுக்கள் நீண்ட நாள் வெளியேற்றாமல் இருக்கக்கூடாது. விந்தணுக்கள் வெளியேற்ற சுயஇன்பம் செய்வது தவறில்லை. உடலில் விந்தணுக்கள் தேவை என்றால் மட்டுமே உற்பத்தி செய்யும்.
இதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும்போது புதிய விந்தணுக்கள் உருவாகும். இதனால் பெண்கள் விரைவில் கர்ப்பமடையலாம்.

உணவு:

வேலைக்கு செல்லும் ஆண்கள் சத்தில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் எந்த ஒரு பயனும் ஏற்படுவதில்லை. இதற்காக விட்டமின் சி, இ மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களை பலமாக்கும் என்று செக்ஸ் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மது வேண்டவே வேண்டாம்:

உங்களது கணவர் மது குடிப்பவரா இருந்தால் உடனடியாக அதனை நிறுத்த சொல்லுங்கள். இல்லையெனில் உடலில் விந்தணுக்கள் உற்பத்தி குறைந்துவிடும்.

டைட்டான உடைகள்:

ஆண்கள் யாராக இருந்தாலும் தற்போது ஜூன்ஸ் போடுவது பேஷனாகிவிட்டது. நம்முடைய ஊர் சூட்டுக்கு ஜூன்ஸ் போடுவது உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கும்.

விந்தணுக்கள் 3 முதல் 4 டிகிரி செல்சியஸில் தான் வளரும். இதனை மனைவி தடுத்து உடலுக்கு இதமான ஆடையை உபயோகிக்க சொல்ல வேண்டும்.

உடலுறவில் மன அழுத்தம் கூடாது:

கணவன் மனைவி என்னதான் கோபமாக இருந்தாலும் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்த பின்னர் கோபத்தை குறைத்து அன்பாக பழக வேண்டும். அதன் பின்னர் உடலுறவில் ஈடுபட்டால் நன்மையில் முடியும். இதை அனைத்து பெண்களும் முறையாக கணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுக்கு தெரியுமா? தேங்காய் எண்ணெய் வைத்து இதை செய்யுங்கள் அற்புதங்கள் பல!
Next articleமீன் விற்றதால் கிண்டலுக்கு ஆளான கல்லூரி மாணவி! இறுதியில் நடந்தது!