கொரோனா நோய்: ஒருவருக்கு கொரோனா நோய் தாக்கி அவர் இறந்துவிட்டால் அதன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? இறுதிக் கணம் இப்படி தான் அமையும்.
கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்டவரது உடலம் உடனடியாக வைத்தியசாலையின் பிரத்தியேக பிணவறைக்கு மாற்றிவிடுவார்கள். உடலத்தை மிகமிக குறைந்தபட்ச கையாளுகை (அருகில் செல்வதை முடிந்தவரை தவிர்த்தல்)
உடலத்தில் வெளிப்புற பரிசோதனைகள் எதற்குமே அனுமதியில்லை. முதலில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் அதாவது பெற்றோர், சகோதரர், மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே பாதுகாப்பான ஒரு தடவை பார்வைக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கென வைத்தியசாலையில் முற்கூட்டியே பாதுகாப்புமிக்க இடம் ஒன்று தயார்ப்படுத்தப்படும்.
பிரேத பரிசோதனை (Autopsy), உள்ளுறுப்பகற்றல் (Embalming) எதுவுமே இல்லை. உடலம் பிணப்பையில் (Body Bag) வைத்து உடனடியாக சீல் வைக்கப்படும். சீல்வைக்கப்பட்ட பின் உடலம் எக்காரணம் கொண்டும் பார்வைக்கு வைக்கப்படாது. இதற்கென்றே தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து இறுதி மரியாதைக்காக சீல்வைக்கப்படும். இறுதிக் கிரியைகளுக்காக உடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது. வீட்டிற்கு கொண்டுசெல்லவும் முடியாது. இறந்து 24மணித்தியாலத்துள் உடலம் மின்சாரத் தகனம் செய்யப்படும்.
By: Tamilpiththan