நோவ ஸ்கோசியா-புவியியலாளர்கள் மற்றும் அவசரநிலை நிர்வாக அதிகாரிகள் எவருக்கும் தெரியாக ஆழம் கொண்ட புதைகுழி ஒன்று நோவ ஸ்கோசியா, ஒக்ஸ்வோட் பகுதியில் விரிவிடைந்து வருகின்றது.
செவ்வாய்கிழமை அளக்கப்பட்ட போது கிட்டத்தட்ட 34/29 மீற்றர்கள்-முந்திய இரவின் அளவீட்டை விட கிட்டத்தட்ட ஐந்து மிற்றர்கள் விரிவானதாக காணப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் மிகப்பெரிய பாதுகாப்பு கவலை கொண்டதாகும்.
விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் இந்த புதைகுழி விரிவாக்கத்தின் காரணம் என்ன என்பது புரியாத நிலையில் உள்ளனர்.
தினம் தினம் ஊகிக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது.
செவ்வாய்கிழமை துளையின் விளிம்பு லயன்ஸ் கிளப் தரிப்பிட நடை பாதை வரை விரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 40அடி துளிர் மரமொன்று புதைகுழியால் உறிஞ்சப்பட்டுள்ளது.
அனுதினமும் அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் இந்த இயற்கை நிகழ்வு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.