ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் சுவிற்சர்லாந்தும் டென்மார்க் அணிகள் தகுதி!

0

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் சுவிற்சர்லாந்தும் டென்மார்க் அணிகள் தகுதி!

12 நாடுகளில் நடைறும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் சுவிற்சர்லாந்து மற்றும் டென்மார் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு 2020 ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி (யூரோ) (2020) நடக்க இருக்கின்றது. இதில் இதுவரை 19 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘டி’ குரூப்பில் நடந்த ஆட்டம் ஒன்றில் சுவிற்சர்லாந்து- ஜிப்ரால்டர் அணிகள் மோதி இதில் சுவிற்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் சுவிற்சர்லாந்து அந்த பிரிவில் 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றது. 4-வது முறையாக அந்த அணி முன்னேறி உள்ளது.

இதனை தொடர்ந்து டூப்ளின் நகரில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க்- அயர்லாந்து அணிகள் மோதி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆகி இதன்மூலம் டென்மார்க் 16 புள்ளியுடன் தகுதி பெற்று 8-வது முறையாக நுழைந்துள்ளது.

மேலும் முதல் முறையாக 12 நாடுகள் இந்தப்போட்டியை நடத்துகின்றன. இந்தப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலாகும் அபுதாபியில் டி-10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்!
Next article2020ல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி! தனுசு ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்?