எலி கடித்து உயிரழந்த பரிதாபம்! பிறந்து 8 நாளே ஆன குழந்தை!

0

அரசு மருத்துவமனையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பச்சிளங் குழந்தை, எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

நஜ்ரா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 8 தினங்களுக்கு முன்பு தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வழக்கம் போல, பால் கொடுப்பதற்காக தாய் குழந்தையின் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது ஆண் குழந்தை உடலில் ரத்த காயங்களுடன் அசைவற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், கூச்சலிட்டு அழத்தொடங்கினார்.

அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள், குழந்தையை மீட்டு, பரிசோதித்து பார்த்தனர். அப்போது குழந்தை இறந்தது தெரிய வந்தது. குழந்தையை தாய் பார்த்த போது, உடலிலும் காலிலும் எலி கடித்த வடுக்கள் இருந்தன. அங்கு ரத்தம் உறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், எலி கடித்து அதனால் குழந்தை இறந்துவிட்டது என உறவினர்கள் குற்றச்சாட்டை எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு ஏற்கனவே இதயகோளாறு இருந்ததாகவும், அதனால் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அதேவேளையில், வளாகத்தில் அதிக எலி தொல்லை இருப்பதை தர்பங்கா அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட சீரகத்தின் பலன்கள்!
Next articleதேவையற்ற‌ கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு! இப்படி சாப்பிடுங்கள்!