Home thatstamil one india tamil oneindia tamil எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்! ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக்கின் உருக்கமான பதில்!

எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்! ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக்கின் உருக்கமான பதில்!

0
611

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தமிழிலும் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்த இவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தன்னை விட 10 ஆண்டுகள் இளையவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா.

இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு பிரியங்காவிடம் பலரும் கேட்ட கேள்வி எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான். இதற்கு அண்மையில் பேட்டி ஒன்றின் மூலம் பதிலளித்த பிரியங்கா, குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். அது நிச்சயம் நடக்கும். ஆனால் அது கடவுள் நினைக்கும்போது மட்டும் தான் என்று பதிலளித்துள்ளார்.

நிக் ஜோனஸ் கூறுகையில், சில சமயங்களில் குழந்தை வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். அது உண்மையிலேயே எனக்கு பெரிய கனவுதான். நிச்சயம் அந்த அழகான கனவு விரைவில் நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதை நீங்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இந்த இளைய வயதிலேயே உனக்கு இதெல்லாம் தேவைதானா என்று பலர் சொல்லக்கூடும். ஆனாலும் இந்த வயதுக்குள்ளாக என் வாழ்வில் சந்தித்த ஏற்ற இரக்கங்கள் ஏராளம். அந்த அனுபவங்களை எனது வாரிசுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ளவே விரும்புவேன் என்றார்.

Previous articleஅதிகாலை இந்த நேரத்தில் கனவு கண்டால் உடனடியாக பலிக்குமாம்!
Next articleஆண் நண்பருடன் படு மோசமாக நடனம் ஆடிய பிரபல நடிகை! வீடியோவை கண்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்!