தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைகளின் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் விவசாயம் செய்து வரும் பலரும், தொடர்ந்து வன்முறை அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றி இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து பேசுவதாக அந்த தாய் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நிக்கி (45) என்பவர் தன்னுடைய கணவர் ஹெய்ன் (44), 9 மற்றும் 15 வயதான இரண்டு மகன்கள் மற்றும் 13 வயதான மகளுடன் வசித்து வந்துள்ளார்.
1000 ஏக்கர் நிலப்பகுதி கொண்ட ஒரு இடத்தில் தான் இவர்கள் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய வீட்டில் இருந்து வெகுதொலைவில் தான் மற்ற வீடுகள் அமைந்துள்ளன.
மார்ச் 23, 2018 அன்று திடீரென எங்கள் வீட்டின் கதவில் தோட்டா வைத்து பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக என்னுடைய ஒரு மகன் அதிலிருந்து தப்பினான். வேட்டையாடுபவர்கள் தான் சுட்டார்கள் என நினைத்தோம்.
ஆனால் அப்போது என்னுடைய மற்றொரு மகனின் தலையில் துப்பாக்கியை வைத்தபடியே, முன்னாள் கணவர் செபன்சில் சிமனே அங்கு வந்தான்.
அவன் சொல்வதை கேட்காவிட்டால் என்னுடைய மகனை சுட்டுகொன்றுவிடுவேன் என மிரட்டினான். என் மகளை நிர்வாணமாக்கியதோடு, குழந்தைகளின் கண்முன்னே என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்.
அடுத்த சில மணி நேரங்களுக்கு அங்கு எந்த சத்தமும் போட முடியாமல் கண்ணீருடன் என்னுடைய குழந்தைகள் அமர்ந்திருந்தனர். பின்னர் எங்கள் அனைவரையும் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு, என் கணவர் வந்ததும் அவரை கொலை செய்யப்போவதாக கூறினான்.
என் குழந்தைகளின் கண்முன்னே அவரை துண்டுகளாக நறுக்க போகிறேன் என மிரட்டினான். அதன்பிறகு அதிக பணத்தொகையை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
நான் வேகமாக ஓடிச்சென்று என் குழந்தைகளை கட்டியணைத்து அழுதேன். எந்த ஒரு தாய்க்கும் வரக்கூடாத ஒரு சூழ்நிலை அது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செபன்சில் சிமனேவிற்கு 173 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.