Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal என்ன தண்டனை தெரியுமா?பறக்கும் விமானத்தின் இருக்கையில் சிறுநீர் கழித்த பயணி!

என்ன தண்டனை தெரியுமா?பறக்கும் விமானத்தின் இருக்கையில் சிறுநீர் கழித்த பயணி!

0
774

மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் விமான இருக்கையில் சிறுநீர் கழித்த நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தை சேர்ந்த ஷேன் ஓ கிராடி என்ற நபர் பிரித்தானியாவில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.

ஏற்கனவே மது போதையில் இருந்த ஷேன் இன்னும் கூடுதலாக மது வேண்டும் என விமான அதிகாரிகளிடம் கேட்க அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து தகாத வார்த்தைகளை ஷேன் பயன்படுத்திய நிலையில் அவரை கட்டுப்படுத்த ஊழியர்கள் முயன்றனர்.

அப்போது தான் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஷேன் சிறுநீர் கழித்துள்ளார்.

இதை பார்த்து எல்லோரும் முகம் சுழிந்த நிலையில் விமானமானது கேட்விக் விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

இதையடுத்து பொலிசார் ஷேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டதோடு விமான இருக்கையில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காக ஷேனுக்கு £1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதோடு தனியாக £185 பணத்தை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

Previous articleஉலக மக்களை தலைசுற்ற வைத்த சொகுசு வாழ்க்கை! 680 கோடிக்கு செருப்பு….தங்கத்தால் செய்யப்பட்ட ஹேண்ட்பேக்குகள்!
Next articleகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி!