பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை புற்றுநோயில் இருந்து காப்பாற்றியது தேநீர் என்று கூறிவருகிறார்.
பிரித்தானியாவை சேர்ந்த 54 வயதான நிக்கோலா ஃபேர்பிரேஸ் புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்ததை பற்றி தனியார் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் எனக்கு தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும் நான் உறங்கும் மெத்தைக்கு அருகில் எப்போதும் தேநீர் இருந்துக்கொண்டே இருக்கும்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இடது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதை கண்டறிந்தேன். ஆரம்பத்தில் அது இரு நீர்க்கட்டி என நினைத்து விட்டுவிட்டேன்.
பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து பார்த்தபோது கட்டி பெரிதாகியிருந்தது, பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அது புற்றுநோய் என மருத்துவர்கள் கூறினர். மேலும் அது தற்போது மூன்றாவது நிலையை அடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் பரவாமல் இருக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து 6 மாதங்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சமயம் தான் படுக்கையில் இருந்த தான் தினமும் குறைந்தபட்சம் 5 முறை தேநீர் அருந்த ஆரம்பித்தேன்.
அதன் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ததில் கட்டியின் அளவும் 43 மில்லிமீட்டரில் இருந்து 17 மில்லிமீட்டராக குறைந்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் மேர்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் குறைந்துவிட்டதாகவும் ஆனால் 10 வருடங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்.