நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்!

0

கொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், கணவனுடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் புது மனைவியை போல, இந்த சளியும், இருமலும் நம்முடன் ஒட்டிக் கொண்டு பாடாய்படுத்தும்.

சில நேரங்களில் உலகிலேயே கொடுமையான பாதிப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். தும்மி, தும்மி, இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும்.

எப்படி இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை.

கால நிலை மாற்றம் காரணத்தால் நீங்களும் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், இதோ! இந்த 7 எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்…

எலுமிச்சை மற்றும் தேன்

இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.

இஞ்சி மற்றும் தேன்

சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.

உலர் திராட்சை

ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.

புதினா, மாதுளை

புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம்.

மாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

பால், மஞ்சள், மிளகு

இது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.

சீரகம், பனங்கற்கண்டு

பொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தூதுவளை

சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை கொடியை காய வைத்து பொடியாக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடியையும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமடியில வைத்து லேப் டாப் உபயோகிக்கிறீங்களா? ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும்!
Next article5 நாட்களில் கண் கருவளையம் நீங்க எளிமையான வீட்டு மருத்துவம்!