உலகம் முழுவதும் தாக்க வரும் பிரமாண்ட சுனாமி: பீதியை கிளப்பியுள்ள ஆய்வு தகவல்!

0

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வோர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ரொபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

குறித்த ஆய்வில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

அந்தப் பகுதியில் அதிக அளவில் மக்கள் வாழ்கின்றனர். கடல்நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது.

தொடக்கத்தில் தென் சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுனாமி தொடங்கி தெற்கு தாய்வான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை பூங்காவில் உல்லாசமாக இருந்த வைத்தியர் சிக்கினார்!
Next articleயாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல்! விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்!