பெல்ஜியம் நாட்டில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்ற பிரித்தானியர் உறைந்துபோன ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் குடியிருந்து வருபவர் 33 வயதான ஜேசன் காப்பெர்.
இவர் தமது வருங்கால மனைவியுடன் பெல்ஜியத்தில் உள்ள Villerot பகுதிக்கு திருமண விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை முதல் ஜேசன் காப்பெர் மாயமானதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து உறவினர்களும் நண்பர்களும் பொலிசாருடன் இணைந்து தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதனிடையே திருமண விழா மேடைக்கும் குறித்த தம்பதிகள் தங்கியிருந்த இல்லத்திற்கும் இடையே இருந்த ஆறு ஒன்றில் இருந்து ஜேசனின் உடலை பெல்ஜியம் பொலிசார் மீட்டுள்ளனர்.
ஏற்கெனவே பாதி உறைந்த நிலையில் இருந்த அந்த ஆற்றில் ஜேசன் தடுமாறி விழுந்திருக்கலாம் எனவும்,
ஆனால் அவரால் தப்பிக்க முடியாமல் போனதால், அடுத்த நாள் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று ஜேசன் நடந்து சென்ற வழியில் அவரது போன் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே அந்த ஆற்றில் அவர் விழுந்திருக்கலாம் என பொலிசார் தேடத்தொடங்கியுள்ளனர்.
தற்போது அவரது சடலத்தை பெல்ஜியத்தில் இருந்து பிரிஸ்டல் கொண்டுவரும் முயற்சியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.