உங்கள் உடல் உறுப்புகளை நோய் இன்றி பாதுகாக்க வேண்டுமா? எப்படி பலப்படுத்துவது தெரியுமா? எளிய வழிகள். பகிர்ந்து கொள்வோம்.

0

உங்கள் உடல் உறுப்புகளை நோய் இன்றி பாதுகாக்க வேண்டுமா? எப்படி பலப்படுத்துவது தெரியுமா? பலப்படுத்துவதற்கான மிக இலகுவான வழிமுறைகள் சிலவற்றை பகிர்ந்து கொள்வோம்.

தற்போது யாரைக் கேட்டாலும் நேரமில்லை எதைச் செய்யவும் நேரமில்லை என்று சொல்லுமளவிற்கு நேரமின்மை ஒரு பாரிய பிரசசினையாக உள்ளது. இதனால், எமது வாழ்க்கைத் தரம் தொடர்சியாக குறைவடைந்து வருகின்றதுடன், நோய்களே இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு செய்தியாக உள்ளது. இந்நிலையில் குறைந்தளவான நேரத்தில் செய்யக் கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாக செயற்படுகின்றன.

அவற்றை நாமும் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது ஒரு பிரச்சினை என்று சொல்லி முடிப்பதற்குள், அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகின்றது. எனவே, நோய் வருவதற்கான சாத்தியப்பாட்டை குறைப்பதன் மூலம் ஆரோக்கியம் எப்போதும் எமது வசமாகும். அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுததி பாதுகாக்கும் சில எளிய வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மூளையின் செயற்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருக்க முடிவதுடன், தாமரைப்பூவை தண்ணீர் கலந்து நன்கு காய்ச்சி தினமும் மூன்று வேளைகள்; ஒரு டம்ளர் அளவுக்கு 48 நாள்கள் தொடர்சியாக குடித்து வரும் போது மூளையின் செயல்பாடு மேம்படும். மேலம், குறைந்தது வருடமொன்றிற்கு இரண்டு தடவைகளாவது கைகளில் மருதாணி வைக்கும் போது மனம் தொடர்பான கோளாறுகள் நீங்குவதுடன், அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வினையும் வழங்கும்.

வல்லாரை இலைகளை நன்கு நெய்யில் வதக்கி சூடாக உள்ள சோற்றுடன் சேர்த்து இரண்டு கவளம் சாப்பிட்டு வருதல் நல்ல பலனைத் தருவதுடன், தினமும் இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதன் மூலம் மூளையில் எந்தவொரு புண்களும் ஏற்படாது பாதுகாக்கலாம். மேலும், இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து நன்கு அரைத்துக் குடிப்பதன் மூலம் பதற்றத்தைக் குறைக்க முடிவதுடன், மூளையின் நரம்புகளும் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்துவரும் போது மூளையின் செல்கள் புத்துயிர் பெற்று நினைவுத்திறன் மேம்படும்.

கண்கள்

தினமும் பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவதல் அல்லது 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வருதல் அல்லது அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வருதல் அல்லது பொன்னாங்கண்ணி மற்றும் முருங்கைக் கீரைக் சாப்பிட்டு வந்தாலும் பார்வைத்திறன் மேம்படும்.

மேலும், வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா மற்றும் வெண்டைக்காய் பொரியல் போன்றனவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் கண்களுக்கு நல்லது. நாள்;தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரும்போது அல்லது தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரும் போது கண் தொடர்பான பிரச்னைகள் எதுவும் ஏற்படாது.

பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வரும் போது பற்கள் உறுதியடைவதுடன், உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளும் போதும், தினமும் கோவைப்பழம் சாப்பிடும் போதும் பல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படாது.

மேலும், செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வரும் போது பல்லில் ரத்தக்கசிவு மற்றும் பல் சொத்தை போன்றன ஏற்பாமல் தடுப்பதோடு, உறுதியான பற்களைப் பெறுவதற்கு உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு மற்றும் ஆப்பிள் போன்றவற்றைப் குறைந்தது பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிடுதல் வேண்டும்.

நரம்புகள்

நரம்புகள் பலமடைவதற்கு சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்தல், நாளாந்தம் இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருதல், மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து தொடர்சியாக 48 நாள்கள் பருகுதல், அவ்வப்போது இலந்தைப் பழத்தை சுவைத்தல் மற்றும் அடிக்கடி கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வருவது ஆகியன நல்ல பலனைத் தரும்.

ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் போது ரத்த உற்பத்தி வேகம் அதிகரிப்பதுடன், ஒரு டம்ளர் திராட்சைப் பழ ஜூஸ் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்தல் அல்லது இரண்டு லிட்டர் கொதித்த நீரில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வரும் போது ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

மேலும், தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வரும் போது, ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்குவதுடன், அடிக்கடி பொழுதுபோக்காக விளாம்பழம் சாப்பிட்டு வரும் போது ரத்தத்தில் உள்ள கிருமிகள் இறக்கும்.

இதனை விட, நாவல் பழம் மற்றும் இலந்தைப் பழம் ஆகியனவற்றை அவை கிடைக்க் கூடிய காலங்களில் தவறாது உட்கொண்டு வருதல் சிறந்த பலனைத் தரும்.

சருமம்

பளபளப்பான மேனியழகினைப் பெறுவதற்கு ஆவாரம் பூ டீ குடித்தல், ஆரஞ்சுப் பழம் சாப்பிடுதல் போன்றன சிறப்பான வழிகளாக காணப்படுகினறதுடன், முட்டைக்கோஸ் சாற்றினை முகத்தில் தடவி வரும் போது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி வரும் போது முகத்திலுள்ள பருக்கள் நீங்கி முகம் பிரகாசமடைவதுடன், அறுகம்புல்லை தண்ணீர்கலந்து நன்கு அரைத்து, அதனுடன் வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறை குடித்து வரும் போது ஆரோக்கியமான உடல், பொலிவான முகம் மற்றும் பளபளப்பான சருமம் ஆகியன உருவாகும்.

வெள்ளரிக்காய், மஞ்சள் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்க அரைத்து, உடலில் பூசிக் குளித்து வரும் போது எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் தேகம் மினுமினுக்கும்.

நுரையீரல் – இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வரும் போது நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறுவதுடன், கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வருவது சிறந்த பலனளிக்கும்.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு மற்றும் தேன் ஆகியனவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு கரண்டி அளவு சாப்பிட்டு வரும் போது இதயம் பலமடையும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு மற்றும் இஞ்சித் துவையல் ஆகியனவற்றைச் சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருப்பதனை அதிகரிக்கலாம்.

முசுமுசுக்கை இலையை நன்கு தூளாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வரும் போது; நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு வழிவகக்க முடியும்.

மேலம், திராட்சை ஜூஸ் மற்றும் உலர் திராட்சையை சாப்பிடும் போது இதயம் வலுவடைவதுடன், முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு எடுத்து தொடர்சியாக மூன்று வாரங்களுக்கு குடித்து வருவதன் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இதனை விட, ஆளிவிதைகள், பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3 மற்றும் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளதனால் அவையும் இதயத்துக்கு நல்லது.

வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு பின்னர் சிறிதளவு தயிரையும் குடித்து வருவதன் மூலம் வயிறு சுத்தமாக பேண முடிவதுடன், மாதுளம்பூவை தேநீராக்கி தினமும் குடித்து வருவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்ச‌னைகளிலிருந்து விடுபட முடியும்.

கொன்றை பூ கஷாயம் மற்றும் புதினா துவையல் ஆகியன வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகளாக உள்ளதுடன், வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடித்து வருதலும் சிறப்பான பலனைத் தரும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வரும் போது வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்புகள் நீக்கப்படுவதுடன், வாழைப்பூ மற்றும் மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு வரும் போது வயிற்றுத் தொந்தரவுகள் இல்லாது போகும்.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளல் அல்லது வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வரும் போது உடலிலு;ள தேவையற்ற கெட்டக் கொழுப்பு கரைந்து தொப்பையும் குறைவடையும்.

கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு மற்றும் நாவல்பழம் ஆகியனவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருதல் அல்லது தினசரி 5 ஆவாரம் பூவை மென்று சாப்பிடுதல் அல்லது கொன்றைப் பூவை நன்கு அரைத்து அதனை மோரில் கலந்து குடித்து வரும் போது கணையத்தின் செயல்பாடு சீராக இடம்பெறும். மேலும், கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருதல் நல்ல பலனைத் தரும்.

கல்லீரல் – மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருதல், கரிசலாங்கண்ணிக் கீரையை பயன்படுத்தி கூட்டு தயாரித்து சாப்பிடுதல், கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட்டு வருதல், மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுதல், வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடுதல் மற்றும் திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தல் போன்றன கல்லீரல் மற்றும் மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மைபயக்கும்.

மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மலக்குடல் சுத்தம் செய்யப்படுவதுடன், பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுதல், அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிடுதல் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுதல் போன்றன உடலின் சமிபாட்டுத் தன்மையினை அதிகரிக்கும்.

மேலும், மாம்பழ சீசனில் மாம்பழத்தை மாலை ஆறு மணியளவில் தொடர்சியாக சாப்பிட்டு வருதலும், 15 மி.லி மாதுளைப்பூ சாற்றில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வருதல் மிகச் சிறந்த பலனைத் தரும்.

பாதம்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவி வரும் போது கால் வெடிப்பு நீங்குவதுடன், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயினை சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வரும் போது பாதம் மிருதுவாக இருக்கும்.

மேலும், லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவி வரும் போது சேற்றுப் புண்கள் குணமாகுவதுடன், வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வரும் போது கை மற்றும் கால்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

தினமும் இரண்டு கால் விரல்களையும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சியைச் செய்து வருவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகுவதுடன், பாதம் மற்றும் விரல் வலியும் நீங்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது உண்மையா?
Next articleகால் நகத்தில் சொத்தையா? நகம் உடைந்து வலி மற்றும் துர்நாற்றம் வீசுதல் பூஞ்சைத் தொற்று போன்றவற்றை விரைவில் குணப்படுத்த சிறந்த இயற்கை வழிகள்!