உயிர்த் தோழியின் 54 வயது தந்தையை திருமணம் செய்த 27 வயது இளம்பெண்!

0
472

தன்னை விட இரண்டு மடங்கு வயதில் மூத்த, தோழியின் தந்தையைத் திருமணம் செய்துள்ளார் டெய்லர் என்னும் இளம்பெண்.

அமெரிக்காவின் அரிசோனா, பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர். அவரின் நெருங்கிய தோழி அமெண்டா. இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அமெண்டாவின் தந்தை கெர்ன் லேமனைச் சந்தித்தார் டெய்லர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இரண்டு வீட்டிலும் பயங்கரமாக எதிர்த்தனர். அமெண்டாவுக்கும் இதில் விருப்பமில்லை. இறுதியில் போராடி இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்தனர்.

இதுகுறித்து டெய்லர் கூறும்போது, ”முதன்முதலாக லேமனைச் சந்தித்தபோதே பிடித்தது. இருவருக்கும் இசை, பயணம், திரைப்படத்தில் ஒத்த ரசனை இருந்தது. அது காதலாக மாறியபோது தோழியின் தந்தையைத் திருமணம் செய்ய முயற்சிக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டேன்.

ஆனால் அமெண்டா என்னைப் புரிந்துகொண்டார். அதனால் விரைவிலேயே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். கடந்த ஆண்டு மெக்சிகோவில் 25 நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.

என்னை விட வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் அவரின் வருங்காலம் குறித்து என் நண்பர்கள் அச்சம் தெரிவித்தனர். நாளையே கூட நான் முதலில் விபத்தால் இறந்துவிடலாம். என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இன்றைய நாளை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்கிறார்.

Previous articleதங்கத்தை விடவும் விலை மதிப்புள்ள இமயமலை வயாக்ரா பருவநிலை மாற்றத்தால் அழியும் அபாயம்!
Next articleகொழும்பு அரசியலில் அதிரடி! பிரதமராக மகிந்த சத்திய பிரமாணம்!