உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரத்தம் உறைதல் நோயிலிருந்து உங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் ! இதன் அபாயம் உங்களுக்கு தெரியுமா?

0

அறிகுறிகள்: இரத்தம் உறைதல்.

தேவையானவை: நெல்லிக்காய்.

செய்முறை: நெல்லிக்காயை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

ரத்தம் உறைதல்
ரத்தம் உறைதல் என்பது குறிப்பிட்ட இடத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் ஒன்று சேர்வது ஆகும். இது ரத்தக்கட்டு என்றும் கூறப்படுகிறது. இது உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானலும் ஏற்படலாம்.

தமனிகளில் ரத்தம் உறைவது ஏற்பட்டால், மாரடைப்பு மற்றும் பக்க வாதம் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

உடலில் ரத்தம் உறையாமல் இருக்க, தினமும் சில வகை உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் ரத்த நாளங்களில் ரத்தம் திடீரென சிறுசிறு கட்டிகளாக உறைந்துவிடும். இந்த ரத்தக்கட்டிகள் நுரையீரலுக்கோ அல்லது மூளைக்கோ செல்லும்போது உயிரிழப்பு ஏற்படும். இந்த நோய் ரத்த உறைதல் நோய் (டீப் வெயின் துரோம்போசிஸ்) என்று அழைக்கப்படுகிறது.

எந்த ரத்தக்குழாயிலும் ரத்த உறைதல் ஏற்படலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு லேசான தசைபிடிப்பு, காலில் வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அறுவை சிகிச்சை அல்லது ஏதேனும் கடுமையான நோய் காரணமாக மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் நோயாளிளை ரத்த உறைதல் நோய் அதிகளவில் பாதிக்கிறது. இதேபோல், அடிக்கடி விமானங்களில் பயணம் செய்வோரும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

விமானங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அப்படியே உட்கார்ந்திருக்காமல் அவ்வப்போது சற்று எழுந்து நடக்க வேண்டும். சீட்டில் இருக்கும்போது கை-கால்களை விறைப்பாக வைக்காமல் அடிக்கடி அசைத்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதுபானம் குடிப்பதாக இருந்தால் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வோர் இவற்றை கடைப்பிடித்தால் ரத்த உறைதல் நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

எய்ட்ஸ், மார்பக புற்றுநோய், சாலை விபத்து உள்ளிட்டவற்றால் உயிரிழப்போரைக் காட்டிலும் ரத்த உறைதல் நோயால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இது வெளியில் தெரியாது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது இந்தியாவில் ரத்த உறைதல் நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகை உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

ஆளி விதைகள்
ஆளி விதைகள் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் ஒரு களஞ்சியம் என்றே கூறலாம். ஒரு கைப்பிடி அளவு ஆளி விதைகளை உண்வதன் மூலம், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

சாலடுகள், மிருதுவான பானங்களில் இந்த விதைகளை சேர்த்து உண்ணலாம். எனினும், இவற்றை அளவாக உண்ண வேண்டும்.

சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாயில் சாலிசிலேட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதன் மூலம் ரத்தம் உறைவதை தடுக்க முடியும். இது இயற்கையான ரத்த மெலிவூட்டி ஆகும். எனினும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மஞ்சள் தூள்
மஞ்சள் தூளைக் கொண்டு பல்வேறு சிறிய மற்றும் பெரிய உடல் பிரச்சனைகளை தடுக்க முடியும். மஞ்சளில் குர்குமின் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களுடன் இணைந்து இது ரத்தத்தை உறைய வைக்கும் காரணிகளை நீக்கும்.

ரத்தம் கட்டிக்கொள்வதால் ஏற்படும் வலியையும் குர்குமின் தடுக்கிறது. ரத்தக் கட்டிற்கு சிகிச்சை பெற சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, உண்டு வர வேண்டும்.

சியா விதைகள்
சியா விதைகளில் ஏராளமான அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இந்த இரண்டு கூறுகளுமே உடலில் ரத்தக் கட்டு ஏற்படாமல் தடுக்கும் வல்லமை பெற்றவை.

சியா விதைகளை தினமும் எடுத்துக் கொண்டால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தம் உறைவது தடுக்கப்படும்.

நெல்லிச்சாறு
நெல்லிக்காய் சாறு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும். இதில் உள்ள வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து ரத்தக் கட்டை சரி செய்து, உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

இலவங்கப்பட்டை தேநீர்
பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு வெளி மற்றும் ரத்த உறைதலை சரி செய்யும் பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது. தினமும் புதிதாக காய்ச்சிய இலவங்கப்பட்டை தேநீரை பருகி வர, ரத்த ஓட்டம் சீராகும். உணவிலும் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், இந்த தேநீரை அதிகமாக பருகினால் குமட்டல், வாந்தி, சிறுநீரக பாதிப்புகள் உண்டாகும்.

வெங்காயம்

வெங்காயத்தில் இயற்கையாகவே மெலிவூட்டும் பண்பு உள்ளது. இது சுருங்கிய தமனிகளை விரிவுப்படுத்தி தடையில்லாமல் ரத்தம் பாய உதவுகிறது. எனவே, இதய கோளாறு உள்ளவர்கள் ஒவ்வொரு வேலை உணவுடனும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும், வெங்காயத்தை உங்களது சாலட்டிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரை சாறு
கீரைச்சாற்றில் வைட்டமின் K நிறைந்துள்ளது. உடலில் இந்த வைட்டமின் K தேவையான அளவு இருந்தால், ரத்தம் உறைவது தடுக்கப்படும். கீரையை சாலட், சூப் அல்லது மிருதுவான பானங்கள் போன்றவற்றுடன் கலந்து உண்ணலாம்.

இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்ற Active Compound உள்ளது. இந்த கலவை மூலம் ரத்த கட்டு நீக்கப்படுகிறது. ஒருநாளைக்கு இருமுறை இஞ்சி டீ பருகினால், ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

கற்பூரவல்லி
கற்பூரவல்லியில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. தட்டணு திரட்டலை குறைக்க கற்பூரவல்லி வெகுவாக பயன்படுகிறது. கற்பூரவல்லியை உட்கொண்டால் ரத்தக்கட்டை சரிசெய்யலாம். இந்த மூலிகையை வித விதமான உணவுகளிலும் சாலட்டுகளிலும் சேர்த்து உண்ணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயர் இரத்த அழுத்தம் குறைய கறிவேப்பிலைகளை இப்படி செய்து சாப்பிடுங்க !
Next articleஉங்களுடைய இரத்தத்தில் அதிக கொழுப்பு இருக்கா ! இவற்றை அரைத்து உணவுடன் சாப்பிடுங்க! கொழுப்பைக் குறைக்கும் 24 உணவு வகைகள்!