சீரற்ற உணவுப்பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, அதிக வேலைப்பளு என இன்றைய இளைஞர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள் ஏராளம். தாமதமாக சாப்பிடுவது, தவறான நேரத்தில் சாப்பிடுவது போன்றவை பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வயிறு வீக்கம் அதில் முக்கியமான ஒன்றாகும்.
பொதுவாக நீங்கள் தாமதமாகவோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ சாப்பிடுவது உங்களுக்கு பல செரிமான கோளாறுகளை உண்டாக்கும். இதனால் உங்களுக்கு பல அசௌகரியங்கள் உண்டாகலாம். இந்த பதிவில் வயிறு வீக்கம் ஏற்பட காரணங்கள் அதனை தவிர்க்கும் வழிகள் போன்றவற்றை பார்க்கலாம்.
ஏன் வயிறு வீக்கம் ஏற்படுகிறது?
வீக்கம் என்பது வயிற்றில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகும் அசௌகரிய நிலையாகும். இது ஏற்பட முக்கிய காரணம் தவறான உணவுமுறை, நொறுக்கு தீனிகள், அதிகமாக சாப்பிடுவது மற்றும் தாமதமாக தூங்குவது போன்றவையாகும். தாமதமாக சாப்பிடுவது உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தடை செய்கிறது.
இதனால் உணவு மூலக்கூறுகளை உடைக்கும் பணி தாமதமாக்கப்படுவதால் இது மலசிக்கல் போன்ற கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
வீக்கத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்க உடலில் அனைத்து சமநிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சமநிலை உங்களுக்கு போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி மற்றும் டயட் அவசியமாகும்.
தாமதமாக தூங்குவது
தாமதமாக தூங்கி எழுவது என்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால் சரியான உணவை தேர்ந்தேடுப்பதன் மூலம் வீக்கம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம். மேலும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுவதையும் தடுக்கலாம். அதிகமாக சாப்பிடுவது அதிக அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்
புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்றவை வீக்கத்தை ஏற்படுத்தும் பொதுவான உணவுப்பொருட்களாகும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம், இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வீக்கத்தை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் பால் பொருட்கள், இரவு நேரத்தில் ஆப்பிள், பீச் போன்ற பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க வேண்டிய காய்கறிகள் ப்ரோக்கோலி, காலிப்ளவர், முட்டைகோஸ்.
உப்பிடம் இருந்து விலகி இருக்கவும்
இரவு நேரத்தில் அதிக உப்புள்ள உணவுகளை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படும் அபாயம், நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் இருக்கும் நீர் உறிஞ்சும் தன்மை வீக்கம் ஏற்பட முக்கிய காரணமாகும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இரவு நேரத்தில் அதிக உப்பு இருக்கும் உணவை தவிர்க்கவும்.
பதப்படுத்த உணவை தவிர்க்கவும்
பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றில் அதிகளவு உப்பு இருக்கும். இவற்றை உங்கள் சமயலறையில் வைத்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. இந்த உணவுகளை எவ்வளவு அதிகம் சேர்த்து கொள்கிறீர்களோ அவ்வளவு ஆபத்து உங்களுக்கு அதிகரிக்கும். சமைக்கும் போது உப்பிற்கு பதிலாக அதே சுவையுடைய வேறு பொருட்களை அல்லது மூலிகைகளை பயன்படுத்தவுது நல்லது.
கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் ஆல்கஹால்
வயிறு வீக்கம் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று இரவு தாமதமாக கார்பனேட்டட் குளிர்பானங்கள் அல்லது ஆல்கஹால் போன்றவற்றை எடுத்து கொள்வதுதான். இவை உங்கள் வயிற்றில் கார்பன்-டை- ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இதனால் வீக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆல்கஹால் உடலில் இருக்கும் நீரின் அளவை குறைக்கிறது. இதனால் நாம் அதிகம் சாப்பிடவும், குடிக்கவும் தூண்டப்படுகிறோம்.
ப்ரோபையோட்டிக்ஸ்
மருத்துவ ஆய்வுகளின் படி சில ப்ரோபையோட்டிக் பொருட்கள் செரிமான கோளாறுகள் இருப்பவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் வாயுக்கோளாறுகளை தடுக்கிறது. அதேசமயம் இது தனிநபரை சார்ந்தது, ஏனெனில் இது செரிமான கோளாறை நீக்கலாம் ஆனால் வீக்கத்தை குறைக்குமா என்பது சந்தேகமே. ஆனால் ப்ரோபையோட்டிக் உபயோகிப்பது நல்ல முயற்சிதான் ஏனெனில் இது உங்கள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.