உண்மையில் கருநாக்கிற்கு ஆச்சரியமூட்டும் மந்திர சக்தி உள்ளதா? இனி சாதாரணமாக கருத வேண்டாம்! எச்சரிக்கை!

0

பொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் தன்மைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உறுப்புகளின் நிஜ தன்மைக்கும் அவற்றின் மாறுதலான தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புகளின் பல வகையான நிறங்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை தரவல்லது.

அந்த வகையில் நமது நாக்கும் அடங்கும். நாம் பல வகையான நாக்குகளை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் தனி விதமான நாக்குகள் தான் இருக்கின்றன. கருநாக்கு, வெள்ளை நாக்கு, பிங்க் நாக்கு, சிவப்பு நாக்கு என பல வண்ணங்களில் நாக்குகள் இருக்கின்றன.

இந்த ஒவ்வொரு நிறங்களும் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

கருநாக்கா..?
பொதுவாகவே கருநாக்கு உள்ளவர்கள் எதை சொன்னாலும் பலித்து விடும் என்கிற மூட நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஒரு வகையான பாக்டீரியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இவ்வாறு இருந்தால் வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.

பிளந்த நாக்கு
உங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால், உங்களின் உடல் வயோதிக நிலைக்கு செல்கிறது என்று அர்த்தம். நாக்கில் வெடிப்பு போன்றும், பிளந்தும் இருந்தால் இளமை தொலைகிறது என்பதை குறிக்கும். மேலும், ஏதேனும் தொற்றுகளின் பாதிப்பாலும் இப்படி ஏற்படலாம்.

ஸ்ட்ராவ்பெரி நிற நாக்கு
செக்க சிவந்த ஸ்ட்ராவ்பெரி பழத்தை போன்று உங்களின் நாக்கு இருந்தால் நீங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இந்த நிறம், உடலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிற நாக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ நாக்கில் வலி ஏற்பட கூடும். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

வெள்ளை நிற நாக்கு
நாக்கு வெள்ளையாக இருப்பதை கண்டு சுத்தமாக உள்ளது என நினைத்து விடாதீர்கள். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணிகளால் கூட இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நாக்கில் முடியா..?
சிலருக்கு நாக்கில் சிறிது முடி போன்ற தோற்றம் இருக்கும். இது சில சமயங்களில் ஆபத்தான அறிகுறியை நமக்கு சொல்கிறது. அதாவது, உங்களின் நாக்கு இவ்வாறு இருப்பதற்கு HIV வைரஸ் பாதிப்பாக கூட இருக்கலாம். அல்லது பாக்டீரியா தாக்குதலால் நாக்கு இது போன்று பழுப்பு நிறத்தில் முடி வளர்ந்தது போன்று காணப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி கொடூரம் வீடியோவில் இருப்பது நான் அல்ல பார் நாகராஜின் அதிரடி பேட்டி..!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 16.03.2019 சனிக்கிழமை !