உண்மையிலே மிளகாயின் காரத்தன்மை அதன் விதையில் இல்லையாம்! அப்போ வேற எதுல இருக்கு தெரியுமா!

0

இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு… இந்த 6 சுவைகளில் பலருக்கும் பிடித்தமான சுவை காரம் தான். சமைக்கும் உணவு ருசி அதிகமாகவும் காரசாரமாகவும் இருந்தால் அவ்வளவு தான். ஒரு பிடி பிடித்து விடுவோம். காரசார உணவு தான் உடலுக்கு அதிக நன்மையை தர கூடியவை. இந்த வகை உணவுகள் உடலுக்கு அதிக பலம் சேர்ப்பவையும் கூட.

மற்ற உணவு வகையை காட்டிலும் காரசார உணவு வகைகள் நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு இருக்கும். காரசார உணவு என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது மிளகாய் தான். மிளகாயின் காரமான சுவை தான் நேரடியாக உணவின் ருசியை வேற உலகிற்கு கொண்டு செல்கிறது. மிளகாயின் விதைகள் தான் காரத்திற்கு முக்கிய காரணம் என பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், இது அப்படி கிடையாது. மிளகாயின் காரசார சுவைக்கு அதன் விதைகள் காரணம் இல்லையாம். அப்போ வேறு என்னதான் காரணம் என்பதையும், காரசார உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.

வரலாறு
எல்லா உணவு வகைகளுக்கு இருப்பது போன்ற வரலாறு மிளகாயிற்கும் உள்ளது. இது வட மெக்ஸிகோ மற்றும் தென் டெக்ஸாஸ் பகுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உணவு வகையாகும். இதன் காரத்தன்மையை அறிந்த பின்னர் அந்நாட்டு மக்கள் இதனை பலவித உணவு வகைகளில் சேர்க்க தொடங்கினர். இப்படி தான் மிளகாய் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது.

காரமில்லை
நாம் நினைப்பது போன்று மிளகாயின் காரத்தன்மை அதன் விதைகளில் இருப்பதில்லை. விதைகளை நீக்கினாலும் மிளகாயின் காரத்தன்மை அப்படியே தான் இருக்கும். அத்துடன் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு ஒரு வித வெப்பத்தை ஏற்படுத்துவதும் இந்த விதைகள் கிடையாதாம்.

ஆய்வு
மிளகாயை பற்றிய ஆராய்ச்சியில் சில தகவல்கள் வெளி வந்தன. அதில் கார தன்மையுள்ள உணவு பொருட்களில் மிளகாய் அதிக நன்மை வாய்ந்ததாகும், பலவித சத்துக்களை கொண்டதாகவும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டன. அத்துடன் மிளகாயின் நீண்ட நாட்களாக வெளிப்படாத இரகசியமும் வெளி வந்தது.

வெள்ளை பகுதி
இந்த ஆய்வின் படி, மிளகாயின் விதை பகுதியை விட அதன் வெள்ளை பகுதியிலே காரத்தன்மை அதிக அளவில் இருக்கிறதாம். இவை தான் கேப்சைசின் என்கிற ஒரு வித சுரப்பியை மிளகாயில் உற்பத்தி செய்கிறதாம். இந்த சுரப்பி கார சுவையுடன் கூடிய வெப்ப தன்மையையும் சேர்த்தே நமக்கு தருமாம்.

உடல் மாற்றங்கள்
மிளகாயை சாப்பிடும் போது சிலபல மாற்றங்கள் நமது உடலில் உண்டாகும் என இந்த ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக நமது வாய் மற்றும் தொண்டை பகுதி வெப்பத்தை உமிழ தொடங்குமாம். இந்த வகை செயல்பாடு மூளைக்கு சிக்னலாக அனுப்படும். அதன் பின் வேறு மாற்றங்கள் உண்டாகும்.

இரத்த ஓட்டம்
மிளகாய் சேர்த்த காராசார உணவுகளை சாப்பிடும் போது நமது மூளை எண்டோர்பின் என்கிற ஹார்மோனை வெளியிடுகிறது. இது ஒரு வகையான வலியை நமது உணர்வின் மூலமாக நமக்கு உண்டாக்கும். இறுதியில் கண்ணில் இருந்து கண்ணீரையும் வரவழைப்பதே இதன் வேலையாகும்.

நற்பயன்கள்
மிளகாயை உணவில் சேர்த்து கொள்வதால் பலவித நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இது உதவும். அத்துடன் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக மாற்ற மிளகாய் வழி செய்யும். செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்க காரசார உணவுகள் தான் சிறந்த வழி.

புற்றநோய் அபாயம்
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மிளகாய் உதவும். அத்துடன் புற்றுநோய் அபாயமும் இதனால் குறைக்கப்படும். சளி, தொண்டை எரிச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து மிளகாய் உங்களை காக்கும்.

மூட்டுகளுக்கு
வலுவான மூட்டுகளை பெறுவதற்கு காரசார உணவுகள் சிறப்பான தேர்வு. மேலும், உடல் எடையை கூடாமல் வைக்கவும் மிளகாய் பயன்படும். எனவே, உங்களின் உணவில் மிளகாயை போதுமான அளவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியம் கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்கள் கையில் இந்த ரேகை மட்டும் இருந்துவிட்டால் அவர்களின் அழிவிற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும்!
Next articleவெங்காயம், பூண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்! இனி புற்றுநோய் பயமே வேண்டாம்!