உணவுபஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிபடை, இப்போது இந்தியாவில் முற்றுகை..!

0

உணவுபஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிபடை, இப்போது இந்தியாவில் முற்றுகை..!

கொரோனாவின் தாகத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, எகிப்து, சூடான், யேமன், இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை பாதித்து வருகின்றது.

இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணிக்ககூடியது செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடிய ஆற்றல் பெற்றது இலைகள் மற்றும் மரத்தின் மேல் வேர்கள் வரை எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிடும். ஒரு நாளில் ஒரு கிராமத்தின் மொத்தப் பயிர்களையும் நாசமாக்குவதோடு, ஒரு வாரத்தில் அந்தக் கிராமத்தின் அத்தனை பயிர்களையும் தின்றுவிடும். 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 மில்லியன் டன் உணவுப் பொருளை ஒரே நாளில் முடித்த‌ இந்த வெட்டுக்கிளி கூட்டமானது கென்யாவில் 40 முதல் 60 கிலோ மீட்டர் பரப்பளவில் பயிர்களை சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. மேலும் 2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்த்து விடும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தமிழகத்துக்கு வராது என உறுதியாகச் சொல்ல‌ முடியாது. இவற்றைக் கட்டுப்படுத்துவது தற்போதைய சூழலில் பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோனாவினால் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல்,நாய் வாசலில் 3மாதம்காத்திருந்த துயரம்..!
Next articleஇன்றைய ராசி பலன் 29.05.2020 Today Rasi Palan 29-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!