உடல் பருமன் என்பது இன்று அனைவரும் புற்றுநோயை கண்டு அஞ்சுவது போல எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருந்து வருகிறது. குறைப்பது கடினம், டயட், பயிற்சி என்ன செய்தாலும் உடல் எடை குறைவதில்லை என பலரும் புலம்புவதை நாம் காதுப்பட கேட்க முடிகிறது.
இதற்கு முக்கிய காரணம் உட்கார்ந்தே வேலை செய்யும் நமது வாழ்வியல், வேலை முறைகள் தான். இதுமட்டுமல்ல. வாரம் முழுதும் உட்கார்ந்தே வேலை செய்துவிட்டு, வார இறுதியில் உறக்கமே நிம்மதி என இருந்துவிடுகிறோம்.
இதனால் தான் நீரிழிவு, இதய கோளாறுகள், உடல் பருமன், கொளஸ்ட், இரத்த அழுத்தம் போன்றவை ஒரு பேக்கேஜ் போல இன்று அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. இனி, உடல் பருமன் பற்றி பெரும்பாலும் பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி பார்க்கலாம்…..
உண்மை #1
நமது உலகில் பசியால் அவதிப்படுபவர்களை விட, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம்.
உண்மை #2
மூன்றில் ஒரு அமெரிக்கர் மத்தியில் உடல் பருமன் பிரச்சனை இருக்கிறது.
உண்மை #3
தினமும் வெளியே ஹோட்டல்களில் காலை மற்றும் இரவு உண்ணும் மக்கள் மத்தியில் உடல் பருமன் பிரச்சனை உண்டாகும் அபாயம் அதிகமுள்ளது.
உண்மை #4
மெக்ஸிகோ தான் உலகிலேயே கொழுப்பான நாடு. இந்த நாட்டில் தான் உடல் பருமன் பிரச்சனை அதிகம்.
உண்மை #5
எச்.டி.எல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் கூட, பின்னாளில் கெட்டதாக மாறி, இரத்த நாளங்களில் அடைப்புகளாக உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
உண்மை #6
கடந்த நாற்பது ஆண்டுகளைவிட இப்போது உள்ள கோழிகள் மத்தியில் கொழுப்பின் அளவு 266% அதிகரித்துள்ளது.
உண்மை #7
குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் தந்தையின் உடல் பருமனானது, குழந்தையின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மை #8
நீங்கள் ஒருவாரம் சரியாக உறங்காமல் இருப்பது, உங்கள் உடலில் ஒரு கிலோ எடை அதிகரிக்க செய்யும்.
உண்மை #9
ஒரு கோக் மற்றும் பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிட்டு விட்டு அதன் மூலம் உடலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க நீங்கள் ஏழு மணிநேரம் நடக்க வேண்டும்.
உண்மை #10
உடல்பருமனாக இருந்து கார் ஓட்டுபவர்கள் தான் அதிகம் கார் விபத்தில் உயிரிழக்கின்றனர் என ஓர் ஆய்வறிக்கை தகவல் மூலம் அறியப்படுகிறது.
உண்மை #11
உடல் எடையை குறைக்கும் போது, வியர்வையாக வெளியேறுவதை விட, அதிகம் உங்கள் மூச்சு காற்று மூலமாக தான் உடல் எடை குறைகிறது.
உண்மை #12
பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க மக்கள், உடல் பருமன் ஓர் மருத்துவ கோளாறு என கருதினர்.
உண்மை #13
அமெரிக்காவில் பணக்கார பெண்களைவிட, ஏழை பெண்கள் தான் அதிகம் உடல்பருமனால் அவதிப்படுகின்றனர்.
உண்மை #14
பணக்கார நாடுகளில் ஏழை மக்களும், ஏழை நாடுகளில் பணக்கார மக்களும் தான் அதியளவில் உடல்பருமனால் அவதிப்படுகிறார்கள்.
உண்மை #15
காரமான உணவுகளை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் உடல் பருமன் கோளாறு குறைவு. மற்றும் இவர்கள், மற்றவர்களை விட அதிகநாள் உயிர் வாழ்கின்றனர் என்றும் 2015 ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.