குறுகிய காலத்தில் மேலதிகமான உடல் எடையை குறைத்து உடலின் அதிகப்படியான சக்கரை, உப்பு மற்றும் நச்சுக்களை அகற்றும் அற்புத பழம்!
தினசரி தர்பூசணி சாப்பிட்டு வரும் போது உடல் பருமன் குறைவதுடன், இருதய நோய் மற்றும் நீரிழிவு என்றழைக்கப்படும் சர்க்கரை நோய் வரும் ஆபத்து என்பனவும் குறைவடைகின்றது.
தர்பூசணி டயட்
உடலுக்குத் தேவையான விற்றமின்கள், தாது சத்துகள் மற்றும் நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை அதிக அளவில் கொண்டுள்ள தர்பூசணியில் குறைந்த கலோரியும் மிக அதிகமான நீர்ச்சத்தும் அடங்கியுள்ளதால், உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தருகிறதுடன், உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்பும் இதிலுள்ளதுடன் இயற்கையாகவே கொண்ட தர்பூசணி சாப்பிம் போது பசியால் வாடுதல் என்பது தவிர்க்கப்படுகின்றது.
இவ்வாறாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுவதற்கு சமச்சீர் உணவை நாடுபவர்களுக்கு மிகப்பொருத்தமான ஒன்றாக தர்பூசணி காணப்படுகின்றதுடன், கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீரை அளித்து, புத்துணர்வை புத்துணர்வையும் வழங்குகின்றது.
எனவே, உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்கள், தினமும் காலை மற்றும் இரவு உணவாக தர்பூசணியை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மை, அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு என்பன நீங்கும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
சராசரியாக 60 கிலோ நிறையுடைய ஒருவர், தினமும் 6 கிலோ நிறையுடைய தர்பூசணியினை சாப்பிடலாம். அதாவது, நீங்கள் சாப்பிடும் தர்பூசணியின் நிறைக்கும், உங்கள் நிறைக்கும் உள்ள விகிதம் 1:10 என்ற அளவில் அமைதல் வேண்டும். 100 கிராம் தர்பூசணியில் 7 கிராம் சர்க்கரையும் 32 கலோரி ஆற்றலும் உள்ளதனால், 150 கிலோ கலோரி ஆற்றலை அளிக்கக்கூடிய அளவு தர்பூசணியை, ஒரு நாளில் 8 முறை சாப்பிடுதல் வேண்டும்.
மேலும், தர்பூசணியில் 97% நீர் காணப்படுவதனால், தர்பூசணி டயட் எடுக்கும் நாட்களில் அதிகமான நீர் அருந்துவதை தவிர்க்க முடியும் எனினும், தர்பூசணி டயட்டை 5 நாட்கள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை நினைவில் கொள்வது நல்லது.
ஏனெனில், அதனைவிட அதிகமாக சாப்பிடும் போது அதன் மூலம் பல எதிர்மறையான விளைவுகள் உருவாக்கக்கூடும். இதனால் இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும் நாட்களில் கடின உடற்பயிற்சிகளை தவிர்த்தல் மிகவும் அவசியமாகும். மேலும், இதன்மூலம் அதிகபட்சமாக ஒரே வாரத்தில் 8 கிலோ வரை உடல் நிறையைக் குறைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
By: Tamilpiththan