கொழுப்பில் நல்ல கொழுப்பு, தீயக் கொழுப்பு என இரண்டு வகைகள் இருக்கின்றன.
இதில் நல்ல கொழுப்பை எச்.டி.எல் என்றும். தீயக் கொழுப்பை எல்.டி.எல் என்றும் மருத்துவ முறையில் குறிப்பிடுகிறார்கள்.
உடல் நலனை ஊக்குவிக்கும், நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவுகள்!!! இரத்தத்திலும், இரத்த நாளங்களிலும் அதிகப்படியான கொழுப்பு சேர்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
இந்த உணவுகள், இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்பினை அகற்ற சிறந்த உணவுகளாகும். மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் – சிறப்பு தொகுப்பு
அவகேடோ (வெண்ணைப் பழம்)
இது தீயக் கொழுப்பை நீக்குவதற்கு மட்டுமின்றி, நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் பழமாகும். குறிப்பாக அதிக கொழுப்பு அளவு உள்ளவர்களுக்கு இது நன்மை விளைவிக்கும். இந்த பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்பு இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் தீய கொழுப்பினை நீக்க உதவுகிறது.
ஓர் நாளுக்கு மூன்று பாதம்
பாதாமில் இருக்கும் கலவைகள் எல்.டி.எல் எனப்படும் தீயக் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மற்றும் இதயம், இரத்த நாளங்களில் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.
நல்ல கொழுப்புகள்
நல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மீன் கடல்
உணவு எனப்படும் “சீ ஃபுட்ஸ்”, கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து (Fiber) உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஓட்ஸ்
அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
ப்ளூ பெர்ரி
ப்ளூ பெர்ரியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், தீயக் கொழுப்பின் மூலம் ஏற்படும் சேதங்களை தடுக்க உதவுகிறது.