உடல் எடையை குறைக்க இந்த பழத்தை சாப்பிடால் சட்டென எடை குறையும்!

0
391

தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? தர்பூசணி உடல் எடையை எப்படி குறைக்கிறது என்பதை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.

தினசரி தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், இருதய நோய் மற்றும் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் வரும் ஆபத்து குறையும்.

தர்பூசணி டயட்
உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்பு இயற்கையாகவே தர்பூசணிக்கு உண்டு. அதேசமயம், தர்பூசணி சாப்பிடுவதால் பசியால் வாடி விடவும் மாட்டோம்.

வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான தாது சத்துகள் மற்றும் நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை அதிக அளவில் கொண்டுள்ள தர்பூசணியில் குறைந்த கலோரியும் மிக அதிகமான நீர்ச்சத்தும் அடங்கியுள்ளதால், உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தருகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுவதற்கு சமச்சீர் உணவை நாடுபவர்களுக்கு தர்பூசணி ஏற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீரை அளித்து, புத்துணர்வை தர்பூசணி தரும்.

உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்கள், தினமும் காலை மற்றும் இரவு உணவாக தர்பூசணியை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மை, அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு நீங்கும் .

எவ்வளவு சாப்பிடலாம்?
நீங்கள் 60 கிலோ எடை இருந்தால், தினமும் 6 கிலோ எடை அளவுக்கு தர்பூசணி சாப்பிடலாம்.

அதாவது, நீங்கள் சாப்பிடும் தர்பூசணியின் எடைக்கும், உங்கள் எடைக்கும் உள்ள விகிதம் 1:10 என்ற அளவில் அமைய வேண்டும்.

150 கிலோ கலோரி ஆற்றலை அளிக்கக்கூடிய அளவு தர்பூசணியை, ஒரு நாளில் 8 முறை சாப்பிட வேண்டும். 100 கிராம் தர்பூசணியில் 7 கிராம் சர்க்கரையும் 32 கலோரி ஆற்றலும் உள்ளது.

தர்பூசணியில் 97% நீர் இருப்பதால், தர்பூசணி டயட் எடுக்கும் நாட்களில் அதிகமான நீர் அருந்துவதை தவிர்க்கலாம். தர்பூசணி டயட்டை 5 நாட்கள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

அதைவிட அதிகமாக சாப்பிடுவது எதிர்மறை விளைவுகளை உருவாக்கக்கூடும். இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும் நாட்களில் கடின உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.

இதன்மூலம் அதிகபட்சமாக ஒரே வாரத்தில் 8 கிலோ வரை உடல்எடையைக் குறைக்க முடியுமாம்.

Previous articleஆண்கள் தொப்பையை குறைக்க உடனடியாக செய்யவேண்டியது!
Next articleபெண்களின் மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி!