அறிகுறிகள்: வலுவற்ற எலும்புகள்.
தேவையானவை: முருங்கைப் பிஞ்சு, நெய்.
செய்முறை: முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறியதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை சாப்பிட்டு வந்தால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைளும் பலப்படும்.
எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் சாமை, தினை அரிசி அடை தேவையானவை: சாமை, தினை அரிசி – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 50 கிராம், தக்காளி – 1, மிளகு – 20, சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 பல், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை: சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
அறிகுறிகள்: எலும்புகள் வலுவின்மை.
தேவையானவை: கஞ்சாங்கோரை இலை பொடி, மிளகுத்தூள்.
செய்முறை: கஞ்சாங்கோரை இலை பொடி பத்து கிராம், மிளகுத்தூள் ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் எலும்புருக்கி நோய் குறையும்.