உடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

0

ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கென்று சில குறிப்பிட்ட கால நேரம் உள்ளது. நமக்கு பிடிக்கிறது என்பதற்காக கண்ட நேரங்களின் கண்ட உணவுகளை சாப்பிட கூடாது. முக்கியமாக பழங்களை எல்லா நேரங்களிலும் சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக பலவித பாதிப்புகள் உடலுக்கு உண்டாகும்.

இவை பழங்களின் நல்ல பண்புகளை மாற்றி மோசமான தன்மையை தந்து விடும். எல்லா வித பழங்களுக்கும் இது ஏற்றதாக இருக்காது. ஆனால், வாழைப்பழம், ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களை எல்லா நேரத்திலும் நாம் சாப்பிட இயலாது. எல்லா நேரங்களிலும் பழத்தை சாப்பிடுவதால் அது உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விடும். முக்கியமாக அந்த நாட்களில் நாம் மாதுளையை சாப்பிடலாமா? அவ்வாறு சாப்பிட்டால் என்ன நடக்கும்? எப்போது சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்? போன்ற பல கேள்விகளுக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும்.

பெண்களின் பிரச்சினையை மட்டும் தான் மாதுளை குணப்படுத்தும் என பலர் தவறாகவே எண்ணி கொண்டுள்ளனர். ஆண்களின் பிரச்சினையை சரி செய்யவும் சிறந்த மருந்தாக மாதுளை உள்ளது. விறைப்பு தன்மை முதல் ஆண்மை குறைபாடு வரை குணப்படுத்தும் தன்மை இதற்குண்டு என ஆராய்ச்சிகளே சொல்கின்றன.

உடலில் ஏற்படுகின்ற ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்க மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருப்பதால் சீரான இரத்த ஓட்டத்தை தரும். அத்துடன் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கவும் மாதுளை வழி செய்கிறது.

ஆண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்பட கூடிய இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த மாதுளை சிறந்த மருந்தாக உள்ளது. இதனால் தாம்பத்தியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். அத்துடன் விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விரைவிலே கருத்தரிக்க மாதுளை உதவும்.

ஆண்களை விட பல விதத்தில் பெண்களுக்கு மாதுளை உதவுகிறது. இதன் ஒவ்வொரு முத்திலும் பல்லாயிர கணக்கான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால், பல பெண்களுக்கு மாதுளையை பற்றிய சந்தேகம் அதிகமாகவே உள்ளது. இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது, எந்த நேரத்தில் சாப்பிட கூடாது என்பன போன்ற கேள்விகள் நிச்சயம் இருக்கும்.

உடலுறவு வைத்து கொள்ளும் நாட்களில் ஆணும் பெண்ணும் மாதுளையை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சிறப்பான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிக விரைவிலே கருத்தரிக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.

போலிக் அமிலம் அதிக அளவில் மாதுளையில் இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கு அருமருந்தாக இருக்கும். இரத்த சோகை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதுளை உதவும். இருப்பினும் அதிக அளவில் மாதுளையை கர்ப்ப காலங்களில் எடுத்து கொள்ள கூடாது. உங்கள் உடலின் தன்மைக்கேற்ப மாதுளையை எவ்வளவு சாப்பிடலாம் என உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் போது, ஆணுக்கு இல்லாமலோ.. அல்லது ஆணுக்கு உடலுறவு வைத்து கொள்ளும் எண்ணம் வரும் போது பெண்ணுக்கு இல்லாமலோ இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இருக்காது. இருவருக்கும் கூடுமான அளவிற்கு பாலுணர்வை தூண்ட மாதுளையை சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் உள்ள பலவித சத்துக்கள் சிறப்பான முறையில் செயல்பட உதவும்.

மாதவிடாய் காலங்களில் மாதுளை சாப்பிடலாமா? கூடாதா? என்கிற கேள்வி பல பெண்களுக்கும் உள்ளது. மாதுளையை பற்றிய ஆய்வில் இதனை மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டால் உடல் வலு பெறும் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கருப்பையின் வளத்தை அதிகரிக்க, மாதுளை மாதவிடாய் காலங்களில் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மாதுளையை அப்படியே சாப்பிடுலாமா? அல்லது ஜுஸாக தயாரித்து குடிக்கலாமா? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பழத்தையும் ஜுஸாக சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது தான் சரியான முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்போது தான் அவற்றின் முழு சத்தும் நமது உடலுக்கு நேரடியாக கிடைக்குமாம்.

பொதுவாக பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், பழங்களை இரவில் சாப்பிடுவதை விட காலை நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது. அப்போது தான் அதன் பயன்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். மேலும், பழங்களை அரிந்த சில நிமிடங்களிலே சாப்பிட வேண்டும். இல்லையேல் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இந்த எளிய செயல்களை செய்யுங்க அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கைய !
Next articleதினமும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏ.சி அறையில் இருக்கிறீர்களா! அப்போ இத படிங்க!