சீரக தண்ணீர் கொஞ்சம் குடிங்க! உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.!

0

சீரக தண்ணீர் கொஞ்சம் குடிங்க: உங்க உடம்புல என்ன மாற்றம் வரும் தெரியுமா?

நமது வீட்டு அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

உணவு செரிமானம்

காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது.

இது உடலின் அஜீரண பிரச்சனைகளை தடுத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

நச்சுகளை அகற்ற உதவும்

சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளதால் அது உடலில் இருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது.

இதன் மூலம் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பணியாற்றுகிறது.

1 டம்ளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது.

சுவாச மண்டலம்

1 டம்ளர் சீரக நீர் குடிப்பது, மார்பில் சளி நீர்த்துப்போக உதவுகிறது. அதன் ஆன்டிசெப்டிக் பண்புகள் சளி மற்றும் இருமல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்ல உதவும். இதன் மூலம் சுவாசமண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.

தூக்கத்தின் தரம் அதிகரிக்கும்

சீரக நீர் அருந்துவதால் தூக்கமின்மை என்னும் நோயை நம்மால் அதிக அளவில் குணப்படுத்த முடியும்.

சீரகம் மூளையின் சக்தியை அதிகரிக்க உதவுவதோடு தூக்கத்தின் சிறந்த தரத்தையும் அதிகரிக்கும்.

சருமம்

சீரகத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றி உடலை மென்மையாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் சருமம் இயற்கையாக பளபளப்புடன் இருக்கிறது. முகப்பரு சிகிச்சைக்கும் இது சிறந்த வழியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த வகை மீன்களை அதிக சாப்பிட கூடாது!
Next articleகாதலன் வாக்குமூலம்! இதற்காகத்தான் அவளை கொலை செய்து சடலத்தை அலமாரிக்குள் அடைத்தேன்!