ஆராய்ச்சிகளில் கண்டறிந்த ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாப்பழ இலைகளுக்கு இருப்பது என்பது!
ஆம்! சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் இதனை வைக்கும். நார்சத்துக்களை சரியாக செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த இலைகளை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
அடிக்கடி உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய அற்புத வழி இருக்கிறது. சீத்தாப்பழ இலைகளை வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில், இதன் சாற்றை பிழிந்து தேய்த்தால் வீக்கம் குறையும். மேலும் குடலில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சீத்தாப்பழ இலை டீயை கொண்டு அதனை சரி செய்யலாம்.
இந்த இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது என்றால் மிகவும் வியப்பாகத்தான் இருக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது. எனவே சீத்தப்பழ இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுக்கிறது.
பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படும். இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகிறது. இதில் உள்ள கால்சியம் கைகளின் மூட்டு பகுதிகளையும், கால்களின் மூட்டையும் அதிகம் வலுப்பெற செய்யும். அத்துடன் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனால் நீங்கள் நீண்ட நாட்களுக்கு நோய்கள் இன்றி வாழலாம்.
இதன் இலைகளிலும் அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனால் உங்கள் சருமத்தை பாதுகாத்து நீண்ட நாட்கள் இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தின் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இந்த சீத்தாப்பழ இலை டீ ஒரு நல்ல மருந்து. அத்துடன் உடலில் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.