ஒருவரது உடலினுள் அழற்சி அல்லது உட்காயங்கள் அதிகம் இருப்பதை, ஒரு சிறு இரத்த பரிசோதனையின் மூலம் எளிதில் அறியலாம். இருப்பினும், உடலில் இருக்கும் அழற்சி மற்றும் காயங்களை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும்.
இங்கு ஒருவரது உடலில் இருக்கும் உட்காயங்கள் அல்லது அழற்சி அதிகம் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், உடனே உஷாராகி அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
லேசான மூட்டு வலி
பொதுவாக மூட்டுக்களில் லேசாக வலி எடுத்தால், அதை நாம் நமது தவறான நிலையால் ஏற்பட்டது என்று சாதாரணமாக விட்டுவிடுவோம். ஆனால் இப்படிப்பட்ட லேசான மூட்டு வலிகள் எலும்புகள் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சியையும் குறிக்கும் என்பதை மறவாதீர்கள்.
தசை வலி
எக்காரணமும் இல்லாமல் தசைகளில் வலிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது உடலினுள் உள்ள அதிகமான அழற்சி அல்லது உட்காயத்தினால் தான் ஏற்படுகிறது. உடற்பயிற்சியும் தசை வலியை ஏற்படுத்தும். ஆனால் போதிய ஓய்வை எடுத்து வந்தால், அது குணமாகிவிடும்.
சோர்வு/பலவீனம்
நீங்கள் சமீப காலமாக எப்போதும் சோர்வையும், பலவீனத்தையும் உணர்கிறீர்களா? அப்படியெனில், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் இது உடலினுள் உள்ள நாள்பட்ட உட்காயங்களால் தான் ஏற்படுகிறது. இந்நேரத்தில் ஒரு இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். அதில் ESR மற்றும் PRP போன்றவை அதிக அளவில் இருந்தால், உட்காயங்கள் அதிகம் உள்ளது என்பதைக் குறிக்கும்.
சரும அரிப்பு மற்றும் சிவந்த சருமம்
உங்கள் சருமம் சிவந்தோ, அரிப்புக்களுடனோ இருந்தால், உடலினுள் உட்காயங்கள் அல்லது அழற்சி அதிகம் உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் இயற்கை வைத்தியங்களை முயற்சிப்பதற்கு பதிலாக, தோல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது.
காய்ச்சல்
திடீரென்று உடலின் வெப்பநிலை அதிகமாகவும், குளிர்வது போன்றும், பசியின்மையும் இருந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் இது உடலில் உட்காயங்கள் அதிகம் இருப்பதைத் தான் குறிக்கிற. அதோடு தொடர்ச்சியான தலைவலியையும் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.