உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்!! இல்லையேல் ஆபத்து?

0

உங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.அழைப்புகளை மேற்கொள்வதை தவிர பல்வேறு பயன்களை கைபேசிகள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள கைபேசிகளில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும்.

இன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் பேடரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.உங்களது கைபேசி வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும்.

இதனால் கைபேசிகளில் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.அந்த வகையில் உங்களது கைபேசி சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.

பேடரியை சேமிக்கும் செயலிகள்:கைபேசி பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேடரி பேக்கப்-ஐ அதிகரிக்க கைபேசி எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு கைபேசி ரூட் செய்வது அவசியம் ஆகும்.

ஆன்டிவைரஸ் செயலிகள்:கைபேசிகளை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.

கிளீன் மாஸ்டர் செயலிகள்:கைபேசிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இவை கைபேசிகளை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசிகளில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய கைபேசியின் Settings → Storage → Cache Data சென்று தரவுகளை அழிக்கலாம்.

ரேம் சேமிக்கும் செயலிகள்:கைபேசி செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதலையில் இதனை தூவினால் பொடுகுத்தொல்லை இனியில்லை!
Next articleபூண்டை இப்படி செய்து பல்மேல் வைத்தால் 10 நிமிடத்தில் வலி பறந்து போயிடும்!