உங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்!

0

உங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்…!

பொதுவாக அனைத்து வகை சருமத்தினரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். சருமத்துளைகளில் அழுக்குகள் புகுந்து அடைத்துக் கொள்வதால் வருவது தான் கரும்புள்ளிகள். இத்தகைய கரும்புள்ளிகள் பெரும்பாலும் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் தான் வரும். இதனைப் போக்குவதற்கு கடைகளில் பல நோஸ் ஸ்ரிப்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை தற்காலிக பலனைத் தான் தரும்.

உங்களுக்கு நிரந்தரமாக கரும்புள்ளிகள் வராமல் இருக்க வேண்டுமானால், இயற்கை வழிகளே சிறந்தது. இக்கட்டுரையில் பல சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடாவைக் கொண்டு எப்படி கரும்புள்ளிகளைப் போக்குவது என கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகள் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றவாறு இருக்கும். சரி,
இப்போது பேக்கிங் சோடாவை எந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் அகலும் என்று காண்போம்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். இந்த முறை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் சிறந்தது. அதுவும் வாரத்திற்கு 2-3 முறை செய்வது நல்லது.

1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, மூக்கைச் சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால், கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, மூக்கைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றுவது சிறந்தது.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சொரசொரப்பான இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 சிட்டிகை கல் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, மூக்கைச் சுற்றி தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக மூக்குப் பகுதியை தேய்க்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், கரும்புள்ளகிள் போய்விடும்.

ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த வழி காம்பினேஷன் சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று. இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்வது நல்லது.

1 சிட்டிகை பேக்கிங் சோடாவுடன் 4 துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சொரசொரப்பு நீங்கி சருமம் மென்மையாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம் பெற கைவைத்தியங்கள்!
Next articleமூட்டுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை தடுக்கும் ஆரோக்கியமான மஞ்சள் டீ எப்படித் தயாரிப்பது?