உங்கள் பிறந்த தேதிப்படி நீங்கள் என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கும் தெரியுமா?

0

உங்கள் பிறந்த தேதிப்படி என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிலைத்திருக்கும் தெரியுமா?

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் மகத்துவம் வாய்ந்ததுதான். உங்களின் பிறப்பே உங்களை பற்றிய பல உண்மைகளை கூறிவிடும். ஒருவர் பிறக்கும் நேரம், தேதி, நாள், மாதம் என உங்கள் பிறப்புடன் தொடர்புடைய அனைத்தும் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நீங்கள் பிறந்த தேதி உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் தொடர்ச்சியாக செய்யும் சில வழிபாடுகள் உங்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் பிறந்த தேதியின் படி நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்னெ என்று பார்க்கலாம்.

பிறந்த எண் 1
மாதத்தின் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். இவர்கள் இயற்கையிலேயே தலைமை பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இவர்களுக்கு ரூபி கற்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியவை ஆகும். மேலும் தினமும் காலையில் சூரியனை தண்ணீர் வைத்து வழிபடுவது இவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.

பிறந்த எண் 2
மாதத்தின் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 2 ஆகும். நீங்கள் திங்கள் கிழமையில் விரதம் இருப்பது நல்லது அல்லது உணவில் உப்பை குறைவாக போட்டு சாப்பிட முயற்சி செய்யுங்கள். இவர்கள் திங்கள் கிழமையில் வெள்ளை நிற துணியை அணிவதும், வாழைமரத்திற்கு தண்ணீர் விடுவதும் நல்லது.

பிறந்த எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3 எண்ணால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடையணிய வேண்டும். நீங்கள் விஷ்ணுவை வணங்குவது நல்லது. நீங்கள் விரலில் புஷ்பராகம் அணிவது நல்லது.

பிறந்த எண் 4
உங்கள் பிறந்த தேதி 4, 22, 13, 31 ஆகா இருந்தால் உங்களின் பிறந்த எண் 4 ஆகும். நீங்கள் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. தினமும் வழிபட முடியவில்லை என்றாலும் புதன்கிழமைகளில் கண்டிப்பாக வழிபட வேண்டும். உங்களின் பிறந்த தேதிக்கான ராசிக்கல் கோமேதகம் ஆகும். விநாயகரை கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே வழிபடலாம்.

பிறந்த எண் 5
மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். நீங்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் பசுவிற்கு புல் கொடுத்து வழிபடுவது நல்லது. விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அனைத்திலும் வெற்றியை பெற்றுத்தரும். ராசிக்கல்லை பொறுத்தவரை மரகத கல்லை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிறந்த எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 6 ஆகும். நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று இனிப்பு சாப்பிடுவது நல்லது. ராசிக்கல்லை பொறுத்தவரை நீங்கள் பவளம் அணிவது உங்கள் வாழ்வில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும். மேலும் வாழ்க்கையில் நிம்மதி பெருக அருளை பெற ” ஓம் த்ரா, திரி, த்ரூ சா சுகாய நமஹ ” என்ற மந்திரத்தை கூறி வழிபடவும்.

பிறந்த எண் 7
நீங்கள் 7,16,25 இல் பிறந்திருந்தால், நீங்கள் 7 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் நாய்க்கு தினமும் உணவளிப்பது உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை வழங்கும். சிவபெருமானை மறக்காமல் வழிபட வேண்டும். நீங்கள் வைடூரிய கற்களை அணிய வேண்டும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் ” கம் கீ, கௌ சா, கேத்வா நமஹ ” ஆகும்.

பிறந்த எண் 8
நீங்கள் மாதத்தின் 8,17,26 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 8 என்ற எண்ணால் ஆளப்படுகிறீர்கள். நீங்கள் சனிக்கிழமை தோறும் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதுடன் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். நீங்கள் நீல நிற கற்களை அணிவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சனிக்கிழமைகளில் விரதமிருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

பிறந்த எண் 9
நீங்கள் மாதத்தின் 9,18,27 அன்று பிறந்திருந்தால், நீங்கள் 9 ஆம் எண்ணால் ஆளப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்க செவ்வாய் கிழமையில் அனுமனை வழிபட வேண்டும். மேலும் அந்த நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் மற்றும் செல்வத்திற்கு நீங்கள் அணிய வேண்டியது பவளம் ஆகும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் ” ஓம் பிரஹ் பிரிஹ், ப்ரோ சா பிரம்மய நமஹ ” என்பதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களோட‌ வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தை உங்கள பத்தின‌ ரகசியங்கள் இவை தான் நீங்க இப்படித்தானாம்.!
Next articleஇரவு தூக்கத்தில் அடிக்கடி இவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்களா ஜாக்கிரதையாக இருங்கள்!