Home Patti Vaithiyam உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில எளிய வழிமுறைகள்!

உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில எளிய வழிமுறைகள்!

0
1327

கண்களின் ஆராக்கியமும், அழகும் முக்கியமானது என்பதை உணராதவர்களாக யாரும் இருக்க முடியாது. அத்துடன் நம் இயல்பான அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்குவகிக்கிறது.

உங்களிற்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளோ அல்லது சந்தோசம், துக்கம் போன்ற உணர்வு வெளிப்பாடுகளோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். மொத்தத்தில் கண்கள் உங்கள், அழகை வெளிப்படுத்துவதுடன் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள் எனலாம்.

கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் ஒருவர் அழகுடன் மட்டுமன்றி ஆரோக்கியத்துடனும் இருக்கின்றார் என்பது உறுதி செய்யப்படுகிறது.கண்ணைப் பார்த்து ஒருவருக்கு இருக்கும் நோய்களை செல்லிவுடும் மருத்துவம் கூட இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் ஒவ்வொருவரும் இயல்பாகன சில எளிய வழிமுறைகள் மூலம் கண்ணின் அழகையும், ஆராக்கியத்தையும் பேண முடியும்.

அவ்வாறு உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ:

• தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

• போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

• கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

• கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

Previous articleமன அழுத்த பாதிப்பால் தவிப்பவரா நீங்கள்? உங்களின் மன அழுத்தம் நீங்க 30 வழிகள் இதோ!
Next articleமுடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!