உங்கள் கணவர் ஐதராபாத்திற்குள் நுழைய முடியாது!அபிநந்தன் விவகாரத்தில் சானியா மிர்சாவின் கணவரை விளாசும் நெட்டிசன்கள்!

0
1334

அபிநந்தனை வரவேற்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட ட்விட்டிற்கு கீழே, அவருடைய கணவரின் பதிவை வெளியிட்டு இணையதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 70 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிநந்தன், இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை வரவேற்று இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா, விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். எங்களின் உண்மையான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய துணிவு மற்றும் கண்ணியத்திற்கு இந்த நாடே உங்களை வணங்குகிறது” என ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள், அபிநந்தனை கைது செய்த அன்று உங்களுடைய கணவர் என்ன பதிவிட்டிருந்தார் என்று தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர். வேறு சிலர் உங்களுடைய கணவர் ஐதராபாத்திற்குள் நுழைய முடியாது என கடுமையாக விமர்சித்திருந்தனர்.

Previous articleஇன்று கும்ப ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்!
Next articleமேடையில் நடு நடுங்கிய ராகவா லாரன்ஸ்! பார்வையாளர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சிறுமி! வைரலாகும் காட்சி!