உங்கள் எடை என்ன! அதற்கு ஏற்ப எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரியுமா!

0

உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், நீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் நீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு நீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி நீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….

45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக நீர் அருந்த வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிறந்த நாளின் கூட்டுத்தொகை என்ன‌ அப்போ வீட்ல இந்த பொருளை வாங்கி வைங்க அதிர்ஷ்டம் கொட்டும்!
Next articleஇன்றைய ராசிப்பலன் 21.09.2018 – புரட்டாசி 05, வெள்ளிக்கிழமை !