உங்களை பாடாய்ப்படுத்தும் வயிற்றுவலியை மாத்திரையே இல்லாமல் நொடியில் விரட்டலாம் எப்படி தெரியுமா!

0
377

நாம் அனைவருமே அடிக்கடி சந்திக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சினை என்றால் அது வயிற்று வலிதான், குறிப்பாக அடிவயிறு வலி. அடிவயிற்று வலி ஏற்பட வாயுக்கோளாறு, மலச்சிக்கல், அல்சர் என பல காரணங்கள் உள்ளது. அடிவயிறு வலி ஏற்பட்டால் அது குணமாகும் வரை நம்மால் எந்த வேலையையும் செய்ய இயலாது. வயிற்று வலியை குணப்படுத்த மாத்திரைகளை தேடி ஓடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதில் குணப்படுத்தலாம்.

உண்மைதான், நம் வீட்டில் இருக்கும் பல எல்லோரை பொருட்கள் அடிவயிற்று வலியை மாத்திரைகளை விட மிக விரைவில் குணப்படுத்தக்கூடும். இந்த பதிவில் அனைத்து விதமான வயிற்று வலிகளையும் விரைவில் குணப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவம் என்னவென்று பார்க்கலாம்.

கேரட் மற்றும் புதினா டீ
இது உங்களுக்கு வினோதமாக இருக்கலாம், ஆனால் இது வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு சிறந்த வைத்தியமாகும். குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணமாகும். கேரட் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் புதினா வயிற்று வலிக்கான தீர்வையும் வழங்குகிறது. வெட்டப்பட்ட கேரட் துண்டுகள் 4 கப் தண்ணீர் சிறிது புதினா சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். கேரட் மென்மையான பிறகு அதனை வடிகட்டிவிட்டு குடிக்கவும். தேவைப்பட்டால் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க வைக்கவும். இது உங்கள் வயிற்று வலிக்கு விரைவில் தீர்வை கொடுக்கும்.

அரிசி வேகைவைத்த தண்ணீர்
வயிற்றுவலியை குணப்படுத்தவும், வயிற்றுப்போக்கை நிறுத்தவும் அரிசி வேகவைத்த தண்ணீரை பயன்படுத்தலாம். அரை கப் அரிசியில் 6 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அரிசியை வடிகட்டி விட்டு அதில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்கவும். சில நிமிடங்களிலேயே உங்கள் வயிற்றுவலி காணாமல் போகும்.

டோஸ்ட்
டோஸ்ட் வயிற்றுவலிக்கான ஒரு சிறந்த நிவாரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிலும் கருகிய டோஸ்ட்கள் அதிக பலனை அளிக்கும். ஏனெனில் இது உங்கள் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும் நச்சுக்களை உறிஞ்சிவிடும். இதனுடன் ஜெல்லியை சேர்த்து சாப்பிடுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்
பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் வயிற்று வலிக்கும் சிறந்த நிவாரணத்தை வழங்கும். ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், ஒரு கப் சூடான தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் செரிமான கோளாறுகள், வாயுக்கோளாறு போன்றவற்றை நீக்கி உங்கள் வயிற்றுவலியை போக்கும். மேலும் இது நெஞ்செரிச்சலையும் குணப்படுத்தும்.

யோகர்ட்
வயிற்று வலியுடன் இருக்கும் போது நீங்கள் பொதுவாக பால் தொடர்பான பொருட்களை சாப்பிடமாட்டிர்கள். ஆனால் யோகர்ட் மற்றும் அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றுவலியை குணப்படுத்தக்கூடியவை. மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும். வயிற்றுவலியுடன் இருக்கும்போது எதுவும் உடன் சேர்க்காமல் வெறும் யோகார்ட்டை சாப்பிடுங்கள், சில நிமிடத்தில் உங்கள் வயிற்று வலி குணமாகும்.

பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத்தில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது, இது உங்கள் வயிற்றில் அதிகரிக்கும் கெட்ட பாக்டீரியக்களால் ஏற்படும் வாயுக்கோளாறு, செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிறு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தி வயிற்றுவலியை குணப்படுத்தக்கூடும். வாயுக்கோளாறு இருந்தாலோ அல்லது வயிற்றி வலி இருந்தாலோ ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுங்கள்.

வெப்பம்
உங்கள் வயிற்றுவலியை குணப்படுத்தும் மற்றொரு சக்திவாய்ந்த பொருள் வெப்பம் ஆகும். வயிறு வலிக்கும் இடத்திற்கு அருகில் சூடான பாட்டிலை வைப்பது, அல்லது சூடான நீரில் துணியை நனைத்து வயிற்றின் மேல் வைப்பது போன்றவை நல்ல பலனை அளிக்கும். வெப்பம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உள்ளே இருக்கும் வலியை வெளியே கொண்டுவந்து விடும்.

இஞ்சி
இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம்முடைய வயிற்றில் அதிகமாக இருக்கும் அமிலங்களை வெளியேற்றும் தன்மை கொண்டவையாகும். இதன் மூலம் வயிறு வீக்கம், செரிமானமின்மை போன்ற பிரச்சினைகள் குணமாகும். இது செரிமான அமிலங்களின் அளவை அதிகரிப்பதுடன், வயிற்றில் இருக்கும் அமிலத்தின் அளவையும் சமநிலைப்படுத்துகிறது. அடிவயிற்று வலிக்கு இஞ்சி மிகச்சிறந்த தீர்வாகும்.

Previous articleதினமும் வேகமாக நடப்பதால் இந்த 7 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்!
Next articleதம்மாதுண்டு தக்காளி விதையால தான் இத்தன நோய் நமக்கு வருதாம்! அப்போ எப்படி சாப்பிடலாம்!