உடலுறவு என்பது வெறுமென கூடுதல் அல்ல. அப்படி வெறுமென கூடுதல் உங்களுக்கு உடல் ரீதியான, மன ரீதியான எதிர்வினைத் தாக்கத்தை தான் உண்டாக்கும். செக்ஸ் என்பது வெறும் இச்சை உறவல்ல. அது இன்னொரு உயிரை துளிர்விட செய்யும் இயக்கம். ஒரு பெண்ணை முழுமையடைய செய்யும், மகிழ்வுற செய்யும் உறவும் கூட.
திருமணமான புதிதில், குழந்தைகள் பெற்ற பிறகு தம்பதிகள் கருத்தடை பயன்படுத்த ஆரம்பிப்பது உண்டு. கருத்தடை என்றாலே நாம் அறிந்தது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் மட்டுமே. ஆனால், இவற்றை தவிர வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. கருத்தடை மட்டுமல்ல, சாதராணமாக நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது, கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களும் சிலவன இருக்கின்றன. இவற்றை குறித்து பெரும்பாலான தம்பதிகள் அறிந்திருப்பது இல்லை. முக்கியமாக இந்த எட்டு விஷயங்கள்…
டெண்டல் டேம் (Dental Dams), இவை ஓரல் செக்ஸ் (வாய்வழி செக்ஸ்) மூலமாக பால்வினை நோய் தொற்று உண்டாவதை தடுக்கும். டெண்டல் டேம்ஸ் எனப்படுவது செவ்வக வடிவத்தில் ஒரு ரப்பர் திசு போல இருக்கும். இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது மக்கள் பயன்படுத்துவது உண்டு. இது பால்வினை தொற்று பரவாமல் / ஏற்படாமல் தடுக்கிறது. டெண்டல் டேம் எனும் இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் முன்னர் பெண்குறியில் / ஆசனவாய் பகுதியில் சரியாக பிளேஸ் செய்ய வேண்டும்.
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு மறுநாள் காலை உடலுறவில் ஈடுபடுவது என்பது கருத்தரிக்காமல் இருக்க உதவும் என்பதே பொதுவாக அனைவரும் நம்பும் விஷயம். பி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள் மத்தியில் இது சரியான பலன் அளிப்பதில்லை என்றும், அவர்கள் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வறிக்கை கூறுகின்றன.
பி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள், இதற்கு மாறாக காப்பர் ஐ.யூ.டி முறை பின்பற்றலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கிரார்கள். மேலும், நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால், கருத்தரிப்பதை தடுக்க, உடலுறவில் ஈடுபட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த காப்பர் ஐ.யூ.டி பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆணுறை என்பது லேட்டக்ஸ் (Latex) எனும் ரப்பர் பொருளால் உருவாக்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு இதை பயன்படுத்தும் போது அழற்சி உண்டாகும். இதற்காகவே ரப்பர் அழற்சி இருக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் ஆணுறைகளும் விற்கப்படுகின்றன.
சிலர் விலங்கு தோள்களில் உருவாக்கப்படும் ஆணுறைகள் பயன்படுத்தலாமா? என கேட்பதுண்டு. ஆனால், இது பால்வினை நோய் தொற்று பரவாமல் இருக்க எந்தளவிற்கு உதவும் என்று கூற இயலாது. இது பாதுகாப்பானது என்று யாரும் முழு உத்திரவாதமும் அளிப்பதில்லை. எனவே, ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஆணுறை பயன்படுத்துவது ஒரு நல்ல தீர்வாக அமையலாம். ஒருவருக்கு ரப்பர் ஆணுறை அழற்சி ஏற்படுத்துகிறது என்பதை அந்த இடத்தில் சிவந்து காணப்படுதல், வீக்கம் அல்லது அரிப்பு, எரிச்சல் உண்டாவதை வைத்து அறிந்துக் கொள்ள முடியும்.
பலரும் ஆணுறை விட்டால், கருத்தடை மாத்திரை தான் கருத்தரிக்காமல் இருக்க உதவும் ஒரே வலி என்று கருதுகிறார்கள். ஆனால், கருத்தடை மாத்திரை தவிர, இன்னும் பல வழிகள் இருக்கின்றன. நூவா ரிங் (Nuva Ring), தி பேட்ச் (The Patch) மற்றும் தி பர்த் கண்ட்ரோல் ஷாட் போன்ற முறைகளும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நூவா ரிங் எனப்படுவது பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டியது ஆகும். இது குறைந்த அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் (Estrogen and Progestin) வெளிப்படுத்தும். இவை கருத்தரிக்காமல் இருக்க உதவும். நூவா ரிங் 98% கருத்தரிக்காமல் இருக்க உதவும் என்று கூறப்படுகிறது.
நூவா ரிங்கை மூன்று வாரங்கள் பொருத்திக் கொள்ளலாம். அடுத்த ஏழு நாட்கள் விடுப்பு விட வேண்டும். பிறகு ஏழு நாட்கள் கழித்து மீண்டும், அடுத்த நூவா ரிங்கை 21 நாட்களுக்கு பொருத்திக் கொள்ளலாம். ஒருவேளை நூவா ரிங் பயன்படுத்த போகும் பெண்ணுக்கு புகைப் பழக்கம் இருந்தாலோ, 35 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலோ, இதை பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.
பர்த் கண்ட்ரோல் ஷாட் எனும் முறையானது நர்ஸ் அல்லது மருத்துவர் உதவியுடன் செய்துக் கொள்ளப்படும் கருத்தடை முடையாகும். இது ஒரு இன்ஜெக்ஷன் இதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை போட்டுக் கொள்ளலாம். ஒரு முறை இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டால், மூன்று மாதம் வரை உடலுறவில் ஈடுபட்டாலும் கருத்தரிப்பதை பர்த் கண்ட்ரோல் ஷாட் தடுக்கும்.
இந்த இன்ஜெக்ஷன் (Depo-Provera, the Depo shot, or DMPA) புரோஜஸ்டின் ஹார்மோன் சுரப்பியை வெளிப்படுத்தும் இது கருத்தரிக்காமல் இருக்க தடுக்கும். இது கருப்பை குழாயில் கருமுட்டையை தடுப்பதால், விந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு கருத்தரிப்பு ஆகும் இயக்கம் தடைப்பட்டு போகும். மேலும், இந்த முறை கருத்தரிப்பை மட்டுமே தடுக்குமே தவிர, பால்வினை நோய் தொற்றினை அல்ல.
இந்த டிரான்ஸ்டெர்மால் பேட்ச், மிக எளிமையான, பாதுகாப்பான செலவு குறைந்த கருத்தடை கருவி ஆகும். இது ஒரு வியரப்ல் (Wearable). இதை வயிறு, பிட்டம், முதுகு என எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு மூன்று வாரத்திற்கும் இந்த பேட்சினை நீங்கள் புதியதாக மாற்றி ஒட்ட வேண்டும். இதில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் ஆனது கருத்தரிப்பை தடுக்கிறது.
இந்த கருத்தடை பேட்ச் விந்து கருமுட்டையை எட்டாமல் தடுக்கும். கிட்டத்தட்ட கருத்தடை மாத்திரை போல தான். இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் சுரப்பியை வெளிப்படுத்தி சருமம் மூலமாக ஊடுரவ செய்து கருக்குழாய் கருமுட்டையை வெளிப்படுத்தாமல் தடுக்கும். இதனால், கருமுட்டை வெளிப்படாது, விந்து கருமுட்டையை எட்டாது. இந்த பேட்சும் கருத்தரிப்பை மட்டும் தான தடுக்குமே தவிர, பால்வினை நோய் தொற்றினை அல்ல.
ஒருவேளை தொடர்ந்து உடலுறவில் இருந்துக் கொண்டே இருந்தால், அவர்களுக்கு சிறுநீர் பாதை தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீர் பாதை தொற்று உண்டாகியிருப்பதை வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாவதை வைத்து அறிந்துக் கொள்ளலாம். சிலருக்கு சிறுநீர் கழித்த பிறகும் கூட எரிச்சல் உணர்வு தென்படும். சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்க, உடலுறவில் ஈடுபட்ட பிறகும், ஈடுபடும் முன்னரும் சிறுநீர் கழித்துவிட வேண்டியது அவசியம்.
சிலர் லியூப் பயன்படுத்துவதால் உடலுறவில் உச்சம் அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். லியூப் என்பது ஒருவேளை பிறப்புறுப்பு பகுதி இறுக்கமாக அல்லது வறட்சியாக இருந்தால், வலி ஏற்படாமல் ஈடுபடுவதற்கு மட்டுமே ஆகும். மேலும், உடலுறவில் ஈடுபடும் போது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதன் மூலமாக கூட பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி போன்ற உணர்வு ஏற்படலாம்.
கருத்தடை மாத்திரை, நூவா ரிங், தி பேட்ச், பர்த் கண்ட்ரோல் ஷாட் என கருத்தடைக்கு நீங்கள் எந்த முறையை கையாள போவதாக இருந்தாலும், அதற்கு முன்னர் தகுந்த மருத்துவ நிபுணரை கண்டு அவரிடம் உங்கள் உடல்நல நிலைக்கு எது ஏற்புடையது என்பதை கலந்தாலோசித்த பிறகு பயன்படுத்த துவங்க வேண்டும். ஒருசில மருத்துவ நிலை அல்லது உடல்நிலை வேறுபாடு, கோளாறு உள்ளவர்களுக்கு இவற்றின் மூலம் எதிர்வினை தாக்கம் ஏற்படுவும் வாய்ப்புகள் உண்டு.