உங்களில் யார் ஆண் ராசிக்காரர்கள் யார் பெண் ராசிக்காரர்கள் தெரியுமா?

0

ஆண் ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஆறு ராசிகளும் ஆண் ராசி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண் ராசிகளில் பிறந்தவர்கள் மனோதைரியம் மிக்கவர்கள். நல்ல கம்பீர தோற்றம் தந்தாலும், இவர்களது உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்களை அதிகம் பாதிப்படையச் செய்வது ரத்த அழுத்தம் மற்றும் வாத நோய்களாகும். இவர்களது உடல் பெரும்பாலும் உஷ்ணமாகவே இருக்கும். நெஞ்சு அடைப்பு, கெட்ட கொழுப்பால் வரும் பிரச்சினைகள், சிறுநீர் பிரச்சினைகள் வரலாம். இவர்கள் கூடுமானவரை உடலுக்கு கேடான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நலம் தரும்.

பெண் ராசிகள்

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளும் பெண் ராசிகளாகும். இந்த ராசிகளில் பிறந்தவர்களை, தன்னம்பிக்கை ஒன்று தான் வாழ வைக்கும். நல்ல கவர்ச்சியான உடல் வாகு பெற்றிருந்தாலும், இவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோய் வந்தே தீரும். இவர்களுக்கு வரக்கூடிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம்.

எந்த நேரமும் மனதில் எதையாவது போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் மனத்தெளிவு பெற்றால், பல நோய்கள் வராமல் இருக்கும். பொதுவாக இவர்களுக்கு பிறப்பு உறுப்பு சுற்றி தோல் அரிப்பு, கட்டி, புண், மேக நோய், தேமல் போன்ற தோல் நோய்கள் வரக்கூடும். சிறுநீர் வரும் போது எரிச்சல் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் கஷ்டமான செரிமானம் செய்யும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனி போர் கிடையாது: ஜனாதிபதிகள் அதிரடி அறிவிப்பு- இன்று நடந்தது என்ன?
Next articleபிட்(டத்தில்) உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!