ஈஸியா தொப்பையை குறைக்கலாம்! வெறும் 15 நிமிடமே!

0

தினமும் காலையில் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை விரைவில் குறைந்து பிட்டான வயிற்றை பெறலாம். அதற்கான சில உடற்பயிற்சிகள் இதோ,

பேக் எக்ஸ்டென்ஷன் ஸ்ட்ரெச் (Back Extension Stretch)
தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கைகளை முன்புறம் தரையில் பதித்து, கைகளை ஊன்றியபடி தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும்.

அதன் பின் பழைய நிலைக்குத் திரும்பி, இப்பயிற்சியை 3 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்
முதுகுத்தண்டு நேராகும்.

கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியி ஃபிட்டாகும்.

உடல் முழுவதும் ரத்தோட்டம் சீராகும்.

அப்பர் ஆப் கன்ட்ரோல் (Upper Ab Control)
தரையில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொண்டு கால் முட்டியை மடக்கி, தலை மற்றும் மேல் உடலை உயர்த்தி, கைகளால் முட்டியைத் தொட வேண்டும்.

இதே நிலையில் சில விநாடிகள் இருந்து இப்பயிற்சியை 3 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்
மேல் வயிற்றுப் பகுதி கொழுப்பு குறையும்.

முதுகுத்தண்டு மற்றும் கால் பகுதியின் சதைப் பிடிப்புகள் நீங்கும்.

ஆல்டர்நேட் லெக் (Alternate Leg)
இப்பயிற்சியில் இரண்டு வகை உள்ளது. முட்டி போட்டு உட்கார்ந்து, கைகளை தொடை மீது வைத்து இடது கால் முட்டியின் மீது அமர்ந்து, வலது காலை நேராக நீட்டி உடலை வளைத்து, வலது கையால் வலது காலைத் தொட வேண்டும். இதேபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும்.

இரண்டாவது வகையில், தரையில் முட்டி போட்டு நிமிர்ந்து நின்று இடுப்பில் கைகளை வைத்து, இடது காலை நேராக நீட்டி, இடது கையால் கால் விரல்களைத் தொட வேண்டும்.

இதே நிலையில் சில விநாடிகள் இருந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

பலன்கள்
இடுப்புப் பகுதியில் உள்ள சதைப் பிடிப்புகள் நீங்கும்.
குதிகால் நரம்புப் பிடிப்புகள் நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅகத்திய முனிவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
Next articleவெங்காயத்தை வெட்டி படுக்கை அறையில் வையுங்கள்! அப்பறம் பாருங்க ஆச்சர்யத்தை!