ஆப்கானிஸ்தானில் இரண்டு மாத குழந்தைக்கு பாலூட்டியபடி பெண் ஒருவர் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதிய புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் நிலையில், பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தனது தேர்வினை ஜஹான் என்ற பெண் எழுதி முடித்தது பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
கூலி தொழிலாளியான ஜஹாவின் கணவர்,நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் அவரை படிக்க வைத்து வந்துள்ளார்.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஜஹான் தற்போது மேற்படிப்பு படிக்க அரசு பல்கலைகழகத்திற்கு செல்லவுள்ளார்.
ஜஹானின் நீண்ட நாள் கனவும் தற்போது நிறைவேறவுள்ளது. அவர் வசிக்கும் கிராமத்தில், பெண்கள் படிப்பதே அரிதான காரியம்.
ஜஹான் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தனது கணவரின் உதவியால் படிப்பை தொடர்ந்து வருகிறார்.
அவரின் நீண்ட நாள் கனவே, தான் படித்து நல்ல நிலைக்கு சென்று, அங்குள்ள மற்ற பெண் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர் ஒருவர் படித்தால் அவரின், கிராமமே, மற்ற பெண்களை படிக்க வைக்க முன் வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு பெருமளவில் உள்ளது.
ஜஹானின் குடும்ப சூழ்நிலையைப் அறிந்த ஆப்கானிஸ்தான் அரசு, அவரின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும்,அவர் படித்து நல்ல வேளைக்கு செல்லும் வரை, அவர் குடியிருக்கும் வீட்டிற்கும் வாடகையை அரசே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்