நாம் அன்றாடம் உண்ணும் சில ஆரோக்கிய உணவுகளை ஒன்றாக சாப்பிடும்போது அது எதிர்பார்க்காத அளவிற்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும் எனப்படுகின்றது.
அந்தவகையில் எந்த இரண்டு உணவுகளை ஒன்றாக சாப்பிடும்போது அவை அதிக பலன்களை வழங்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
சிவப்பு குடைமிளாய் மற்றும் கருப்பு பீன்ஸ்
சிவப்பு குடைமிளகாயுடன் வேகவைத்த கருப்பு பீன்ஸை சாப்பிடால் இவை முழுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது ஆகும்.
ஏனெனில் இந்த ஜோடி உணவுகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
வேகவைத்த முட்டை மற்றும் மாம்பழம்
வேகவைத்த முட்டையை சில மாம்பழ துண்டுகளுடன் தினமும் சாப்பிடுங்கள்.
ஏனெனில் முட்டையில் இயற்கையாக உள்ள அமினோ அமிலமும், மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி இரண்டும் சேர்ந்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கக்கூடும்.
ஓட்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி
ஓட்ஸில் உள்ள இரண்டு முக்கியமான பைட்டோகெமிக்கல் அமிலங்களான அனந்தராமைடு மற்றும் பீனாலிக் அமிலம் இரண்டும் ஸ்டராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி உடன் இணையும்போது அவை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளால் ஏற்படும் தீங்குகளை குறைக்கிறது.
மேலும் உங்கள் உடலில் பிளேக் அமைப்பு உருவாவதை தடுப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.
க்ரீன் டீயை மற்றும் எலுமிச்சை
க்ரீன் டீயில் எலுமிச்சை கலக்கும்போது அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரிக்கும்.
ஆகவே க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை நீங்கள் உயர்த்த விரும்பினால் அதில் சில துளிகள் எலுமிச்சை சாறை கலக்கி குடியுங்க.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் அளவில்லா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
ஏனெனில் இது பிளேக் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கக்கூடிய கர்டிஜோங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தக்காளி
தக்காளியில் உள்ள நன்கு கரோட்டினாய்டுகள் ஆலிவ் எண்ணெயுடன் சேரும்போது அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
இலவங்கப்பட்டை மற்றும் பிரட்
கோதுமை பிரட்டை இலவங்க எண்ணெயில் டோஸ்ட் செய்து சாப்பிடுவது அதிக பலனை அளிக்கும்.
ஏனெனில் இலவங்க எண்ணெயில் சமைக்கும்போது அது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி இரண்டுமே தனித்தனியாக புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை ஆகும்.
இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது அது உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.