அறிகுறிகள் :
இரத்தம் உறைதல்.
தேவையானவை:
பனை வெல்லம்,
சுண்ணாம்பு.
செய்முறை :
சுண்ணாம்பு, பனைவெல்லம் ஆகியவற்றை நன்றாக அரைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினந்தோறும் தடவி வந்தால் இரத்தக்கட்டு குறையும்.
உடலில் எந்த பாகத்தில் சுளுக்கு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் இருந்தால் இந்த வைத்தியம் மிக உபயோகமாக இருக்கும்.
நம் வீட்டைச் சுற்றிலும் மற்றும் வாய்க்கால் வரப்பு தரிசு நிலங்களில் எங்கும் காணக்கிடைப்பது தவசு முருங்கை.(தவசி கீரை என்பது வேறு தவசு முருங்கை என்பது வேறு).
இந்த செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அல்லது தேவையான அளவு பறித்துக் கொண்டு வந்து அதை அம்மியிலிட்டு மைய அரைத்து (விழுதாக அரைத்து) உடலின் எந்த பாகத்தில் சுளுக்கு அல்லது இரத்தக்கட்டு இருக்கிறதோ… அந்த இடத்தில் பூச வேண்டும்.
அரைமணி நேரம் கழித்து பூசப்பட்ட பகுதியை தண்ணீரில் மூழ்கும்வரை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அப்பொழுது இரத்தக்கட்டு உள்ள நரம்பு பகுதிகளில் இரத்தக்கட்டு இருப்பதை நாம் காணலாம். சிறிது நேரத்தில் அந்த இரத்தக்கட்டு தண்ணீரில் கரைந்து வெளியெறுவதை காணலாம்.
முழுவதுமாக இரத்தக்கட்டு நீங்கும் வரை காத்திருந்து பின்பு வெளியே எடுங்கள். இப்போது சுளுக்கு நீங்கியிருப்பதையும், வலி முழுவதும் குறைந்திருப்பதையும், இரத்தக்கட்டு மறைந்திருப்பதையும் காணலாம்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல ‘பத்து’ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.
வேறு பயன்கள்
தவசு முருங்கையின் தழையை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிடலாம். இதனால் மூச்சிரைப்பு நோய், இருமல் ஜலதோஷம் போன்ற நோய்கள் குணமாகும்.
வெட்டுக்காயம் மற்றும் புண்களின் மீது இந்த இலையை கசக்கி வைத்து கட்டு கட்டிவிட்டால் போதும். வெட்டுக்காயம் தானாக ஆறிவிடும்.
தவசுக்கீரையை அரைத்து சாறுபிழிந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் மறையும்.
பெண்களின் பிரசவத்திற்கு பிறகு மீதமுள்ள அழுக்குகள் கர்ப்பப்பையை விட்டு நீங்கும்.