Home thatstamil one india tamil oneindia tamil இளம் பெண் கொலையில் கள்ளக்காதலனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

இளம் பெண் கொலையில் கள்ளக்காதலனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

0
440

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் கோத்திகிரி கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் திருமணம் ஆன இளம் பெண் பூட்டிய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் அவரது 4 வயது மகனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். சிறுவனை மீட்டு போலிசார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் ஈரோட்டை சேர்ந்த கவுரி சங்கர் என்ற வாலிபரை போலிசார் கைது செய்துள்ளனர். லோகேஸ்வரியின் செல்போனை ஆய்வு செய்த போலிசார் சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் அடிக்கடி ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். அந்த எண்ணில் லோகேஸ்வரியை தொடர்பு கொண்டது கவுரி சங்கர் என்பதை உறுதி செய்தனர்.

கவுரி சங்கரிடம் போலிசார் விசாரனை நடத்தியதில் லோகேஸ்வரியை தான் தான் கொலை செய்ததாக கவுரிசங்கர் ஒத்துக் கொண்டுள்ளார். மகன் பார்த்து விட்டதால் வெளியே சொல்லாமல் இருக்க அவனது கழுத்தையும் அறுத்தேன் என பரபபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் கவுரி சங்கர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

லோகேஸ்வரிக்கும் கோத்தகிரியை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கணவர் மற்றும் குழந்தையுடன் லோகேஸ்வரி

ராஜேஸ்குமார் வெளிநாட்டில் பணிபுரிகின்றார். இதனால் லோகேஸ்வரி தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

உடல் எடையை குறைக்கும் சாதனங்கள் விற்கும் நிறுவனம் ஒன்றில் லோகேஸ்வரியும் கவுரிசங்கரும் சந்தித்துள்ளனர். பின்னர் அது கள்ளக் தொடர்பாக மாறியுள்ளது.

கவுரிசங்கர் அளித்துள்ள வாக்கு மூலம்

”நானும் லோகேஸ்வரியும் பழகினோம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தனக்கு திருமணம் ஆனதை லோகேஸ்வரி என்னிடம் மறைத்து விட்டார். கணவர் இல்லாததால் லோகேஸ்வரி இருக்கும் கோத்தகிரி வீட்டிற்கு அடிக்கடி நான் சென்று வருவேன். அங்கு தங்கி லோகேஸ்வரியுடன் இருந்து விட்டு வருவேன்.

ஒரு கட்டத்தில் லோகேஸ்வரி எண்ணிடம் போன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். விசாரித்தில் அவருக்கு என்னை போன்று மேலும் 4,5 ஆண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது.

சம்பவத்தின் போது கோத்தகிரிக்கு லோகேஸ்வரி வீட்டிற்கு சென்றேன். அவரிடம் ஏன் என்னிடம் பேசுவது இல்லை எனக் கூறி இது தொடர்பாக கேட்டேன் அதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு நான் கட்டிய தாலியை லோகேஸ்வரி கழட்டி எறிந்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரை கொலை செய்தேன். இதை சிறுவன் பார்த்து விட்டதால் வெளியே சொல்லாமல் இருக்க அவனது கழுத்தையும் அறுத்தேன் பின்னர் தங்க செயினை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டேன்”

கள்ளக்காதலனின் வாக்கு மூலத்தின் மூலம் இந்த கொலையின் பின்னணி தெரியவந்துள்ளது. கொலையின் பின்னணியை கண்டுபிடித்த கோத்தகிரி காவல்துறை அதிகாரிகளை மாவட்ட எஸ்பி சண்முகபிரியா பாராட்டினார்.

கவுரி சங்கரை போலிசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் கவுரி சங்கர் அடகு வைத்த அந்த 5 பவுன் நகையையும் மீட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் உடல் நிலை தேரி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous article175 அடியில் பிரம்மாண்ட விஜய் கட்அவுட் பார்க்க குவிந்துள்ள கூட்டம்!
Next articleடாக்டர் மருமகள் எடுத்த அதிரடி முடிவு! சாதிவெறி பிடித்த மாமியார்!