Home thatstamil one india tamil oneindia tamil இளம் பெண்கள்! இலங்கையின் ஒரு பகுதியில் வைத்து கைது!

இளம் பெண்கள்! இலங்கையின் ஒரு பகுதியில் வைத்து கைது!

0
443

ஆயூர்வேத “மசாஜ்” நிலையமொன்றினை சுற்றி வலைத்த மொனராகலைப் பொலிசார் நிலைய முகாமையாளரையும் நான்கு இளம் பெண்களையும் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது ஆயூர்வேத “மசாஜ்” நிலையப் பெயரில் விபசார விடுதி நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

இது குறித்து மொனராகலை பிரதேச சபை தலைவர் மொனராகலைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலினடிப்படையிலேயே மேற்படி “மசாஜ்” நிலையம் சுற்றி வலைக்கப்பட்டது. “மசாஜ்” நிலையம் குறிப்பிட்ட பகுதி பிரதேச சபையினால் அனுமதிப்பதிவை பெற்றிருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்யப்படாமல் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த குறித்த “மசாஜ்” நிலையம் விபசார விடுதியாக்கப்பட்டிருப்பதால் மொனராகலைப் பகுதியில் சமூகச் சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து மொனராகலை பிரதேச சபைத் தலைவர் மொனராகலைப் பொலிசாருக்கு தெளிவுபடுத்திய தகவலை வழங்கிருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபட இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Next articleஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் இவைதான்!