இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு எதிராக சற்று முன்னர் அதிரடி நடவடிக்கை!

0
1034

தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் நாளைய தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது.

இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் நெருங்கிய நண்பர் ஒருவரை சற்று முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக இரு வெளிநாட்டு பெண்களினால் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலகவின் நெருங்கிய நண்பர் ஒருவர் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous article23.07.2018 இன்றைய ராசிப்பலன் திங்கட்கிழமை!
Next articleவட மாகாணத்தில் இத்தனை பில்லியன் கோடி ரூபா பணமா? புலம்பெயர் தமிழர்களின் தியாகமா?