இலங்கையை உலுக்கியுள்ள பெண்!

0
366

கம்பஹா – பிரதேசத்தில் வங்கி கணக்காளராக கடமை ஆற்றி 2 கோடியே 29 லட்சத்து 41 ஆயிரத்து 349 ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு அமைவாக நேற்று அவர் கேகாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநயாக்க விமான நிலையத்திற்கு வந்த வேளை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

எனினும் இதன்போது அந்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தொலை தொடர்பு கோபுர தரவுகள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேக நபரான பெண் இருந்த பகுதி நேற்று கண்டு பிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா – திமுது மவத்தை பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பெண் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த போது, தப்பிச் சென்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Previous articleதாயும் மகளும் வெட்டிப் படுகொலை! இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
Next articleஇலங்கை வங்கியில் முதன் முறையாக நிகழ்ந்த ஆச்சரியம்!