இலங்கையில் நேற்று நடந்த கோர விபத்துக்கான காரணம் என்ன? மறைக்கப்பட்ட தகவல் அம்பலம்!

0

கொழும்பு – கண்டி பிரதான ரயில் பாதையில் நேற்று ஏற்பட்ட விபத்து ஒட்டுமொத்த இலங்கையையும் உலுக்கியிருந்தது.

பொல்கஹவெல ரயில் நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் 32 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான ரயில்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ரயில்கள் இரண்டும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அலவ்வ பிரதேசத்தில் பாரிய விபத்துக்குள்ளானவை என தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு பின்னால் வந்த மற்றுமொரு ரயில் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அலவ்வ பிரதேசத்தில் இதற்கு முன்னரும் இதே போன்ற விபத்தே நிகழ்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட விபத்துக்கும் குறித்த ரயிலில் உள்ள ஏதேனும் பிரச்சினையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அலவ்வ ரயில் விபத்தின் பின்னர் குறித்த ரயில் நல்ல முறையில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நேற்று ஏற்பட்ட பாதிப்புகள் குறைவாக காணப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு!
Next articleமுக்கிய அமைச்சர்கள் வருகை! கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு! தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு!