இலங்கையில் ஏற்பட்ட அபூர்வம்! 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்!

0

சீதுவை பகுதியிலுள்ள மண் மேட்டில் இருந்து பெருந்தொகை நாகப் பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.

ரத்தொழுகம வீட்டிற்கு அருகில் மண் மேட்டிற்குள் மறைந்திருந்த 37 குட்டிகளுடன் மிகவும் நீளமான பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பாம்பும் அதன் குட்டிகளும் காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

5 அடி நீளமான இந்தப் பாம்பு நாஜா நாஜா என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படுகிறது.

இலங்கையில் வாழும் நாகப்பாம்பு ஒரு தடவையில் 10 தொடக்கம் 30 முட்டைகளை இடும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து முட்டைகளும் உடைந்து பாம்புகள் வெளியாகும் சந்தர்ப்பங்கள் ஓரளவு குறைவு. எனினும் இதுவொரு அபூர்வ சம்பவம் எனவும் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ். குடா நாட்டில் புதிய அச்சுறுத்தல்! தாய், மகன் மீது இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்குதல்!
Next articleயாழில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்! வழக்கில் திடீர் திருப்பம்!