இலங்கையில் அதிர்ச்சியில் மக்கள்! திடீரெனெ மறைந்து போன பொக்கிஷம்!

0

இலங்கையின் பெரும் பொக்கிஷமான உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், சோல்டன், ஆனகுத்துவ, சேவன்தீவு, மன்னதீவு உட்பட பல பிரதேசங்களில் உப்பு உற்பத்தி தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களாக நிலவிய கடும் வரட்சியின் பின்னர் பெய்த அடைமழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உப்பு முழுவதும் கரைந்து போயுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையால் பாரிய இலாபத்தை தாம் ஈட்டியதாகவும், மழை காரணமாக தங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு உலக சந்தையில் பெரும் கிராக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் அர்ஜூனுக்கு அவரது மகள்கள் அளித்த பரிசு! என்ன தெரியுமா?
Next articleபுகைப்படத்தை வெளியிட்ட தமிழ் பட நடிகை! என்னை அடித்து உதைத்து, பாலியல் வன்கொடுமை செய்தார்!